தமிழில் சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பெண் எழுத்தாளர்களின் முன்னோடிகள், இன்று எழுதி வருவோர் பற்றிய சுருக்க விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இந்த மாதப் ‘புதிய புத்தகம் பேசுது’ இதழில் தருவது பயனுள்ளதாக இருக்குமென ஆசிரியர் குழு கருதியது. அதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஒரேயொரு நூலின் ஆசிரியர் தொடங்கி, ஏராளமாக எழுதியவர்களும், பரிசுகள், விருதுகள் பெற்றவர்களும், எந்த விதமான பரிசையும் பெறாதவர்களும் என இது கலவையாக உள்ளது. அதே போலப் புனைவிலக்கியம் சார்ந்தவர்கள் மட்டுமே அன்றி அரசியல், சமூக, பொருளாதாரம் சார்ந்து அல்-புனைவுகளை எழுதி வருபவர்களும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு இலக்கியப்படைப்புகளை மொழி பெயர்த்துத் தருவோர் உள்பட வெவ்வேறு வகையினரும் இடம் பெற்றுள்ளனர். காரணம், எல்லாவிதமான புனைவுகளுக்கும், கருத்தியல்களுக்கும், கொள்கைகளுக்கும் அடிப்படையானவை மேற்கண்ட அம்சங்கள் என்பதே. மக்கள் அனைவரும் இலக்கியம் படைக்கவும், படிக்கவும், நுகரவும், உரிமை படைத்தவர்கள் என்ற கண்ணோட்டத்துடன் நமது புத்தகம் பேசுது இதழ் பேசி வருகிறது.
பொதுவெளியில் அரசியல் இயக்கம் சார்ந்தும், சாராமலும் பல்வேறு கருத்தியல்கள் சார்ந்து இயங்குகிறவர்கள், தனிமனிதச் செயல்பாடாக மட்டும் எழுதி வருபவர்கள் உட்பட இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் விரிவும் வீச்சும் நீண்டும் அகன்றும் உள்ளன. இதை இன்னும் நுட்பமாகவும் வகை பிரித்தும்,அகரவரிசைப்படுத்தியும் தரவேண்டுமென்று விரும்பினோம். தேடத்தேடப் பட்டியல் விரிவடைந்து கொண்டே போனது. இன்னும் இதில் இடம் பெறவேண்டியவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்ற உண்மையும் தெளிவாகப் புலப்பட்டது.ஆனால் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்தச் சமயத்தில் இது ஒரு தொடக்கநிலை முன்வைப்பாக இருக்கட்டும் என்று புத்தகம்பேசுது கருதியது. எனவே இப்போதைக்கு முதல் பகுதியாக இது இடம்பெறுகிறது.இதில் நிறைய விடுபடல்கள் உள்ளன.அவற்றையும் சேர்த்து. இன்னும் விரிந்தகன்ற ஒரு முழுப் பட்டியல் தயாரிக்கவும் யோசனை இருக்கிறது. எழுத்தாள நண்பர்களும், தோழர்களும்,வாசகர்களும் இந்த முயற்சிக்குத் துணை நிற்க வேண்டுமென புத்தகம் பேசுகிறது ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறது.
இன்னொரு வேண்டுகோளையும் வைக்கிறோம்:வாசகர்களும் படைப்பாளிகளும் தமது கருத்துகள், பின்னூட்டங்கள் எனத் தமது பங்களிப்பையும் செய்தால் புத்தகங்கள் சூழ்ந்த உலகம் நம் அனைவருக்கும் வசப்படும் நாளை நோக்கி மனிதகுல வரலாறு நெடுக நடைபெற்று வரும் நீண்ட பயணம் விரைவும் விரிவும் பெற ஓர் உத்வேகம் கிடைக்கும்.
அம்பை : விளக்கு, இயல், கலைஞர் பொற்கிழி, சாகித்திய அகாடமி உள்படப் பல்வேறு அமைப்புகளின் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன; படைப்புகள் : அம்மா ஒரு கொலை செய்தாள், அம்பை கதைகள், -42 ஆண்டுகால (1972-2014) சிறுகதைத் தொகுதி, அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு-சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள், காட்டில் ஒரு மான், சிறகுகள் முறியும், ஒரு கருப்புச்சிலந்தியுடன் ஒர் இரவு, வற்றும் ஏரியின் மீன்கள். அமைதியின் நறுமணம்-இரோம் ஷர்மிளா கவிதைகள்-மொழிபெயர்ப்பு
- அனார்: உடல் பச்சை வானம், எனக்குக் கவிதை முகம்,பெருங்கடல் போடுகிறேன்.
ஆமீனா முஹம்மத் — ஆகாத தீதார்
அழகு நிலா: இவையும் இன்ன பிறவும்.
உமா மோகன் – பாண்டிச்சேரி வானொலி நிலையத்தின் அலுவலராகப் பணியாற்றி சமீபத்தில் எதிர்பாராமல் திடீர் மரணம் அடைந்தவர். தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களோடு மிகுந்த நட்புப் பாராட்டியவர். இவரின் முதல் கவிதைத் தொகுப்பு: ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்.‘ அதன் பின் ‘கனவு செருகிய எரவாணம்‘ உள்பட மேலும் இரு கவிதைத்தொகுதிகள், ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது‘ என்ற சிறுகதைத் தொகுதி ஆகியனவும் வெளியாகின. நாட்டு விடுதலைப் போரில் பங்களிப்புச் செய்த வீரமகளிர் 365 பேர்களின் வாழ்க்கைச் சித்திரங்களின் தொகுதிகளாக ஏழு நூல்களை எழுதித் தொகுத்து வெளியிட்டிருப்பது இவரின் சாதனை எனலாம். ஹர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தின் வெளியீடுகளாக அவை வந்துள்ளன.
சௌமியா ஸ்ரீ – இனியும் மின்வெட்டு வரக்கூடும் – கவிதைகள்
பிருந்தா.சே: மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை. கடல், கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே, மூன்றாவது கதவு என பிருந்தாவின் படைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கோவை கஸ்தூரி ரங்கம்மாள் அறக்கட்டளை விருது, எஸ்.ஆர்.வி.படைப்பூக்க விருது பெற்றவர்.
பாமா: கருக்கு, மனுஷி, சங்கதி
பா.விசாலம் மெல்லக் கனவாய் பழங்கதையாய்..
நாகலட்சுமி சண்மூகம்: யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ், ஹோமோ டியஸ், 21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் ஆகிய மூன்று நூல்கள் உள்பட 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்த சாதனையாளர்.
சுகிர்தராணி: கைப்பற்றி என் கனவு கேள், -அவளை மொழிபெயர்த்தல், இரவு மிருகம், இப்படிக்கு ஏவாள், தீண்டப்படாத முத்தம், காமாத்திப்பூ, உள்பட நூல்கள். இளம் படைப்பாளிக்கான ‘சுந்தர ராமசாமி’ விருது உள்படப் பல விருதுகள் பெற்றவர்.
கு.உமாதேவி: தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது. திசைகளைப் பருகுகிறவள்-இரு கவிதைத் தொகுதிகள்
கிருத்திகா: வாசவேச்வரம், புகை நடுவில்
வே.வசந்திதேவி: கல்வி ஒர் அரசியல், தமிழகத்தில் கல்வி
சல்மா: மனாமியங்கள், சாபம், இரண்டாம் ஜாமங்களின் கதை,பச்சைத் தேவதை, ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
ராஜம் கிருஷ்ணன்: அமுதமாகி வருக, பாதையில் பதிந்த அடிகள்,கரிப்பு மணிகள், குறிஞ்சித்தேன், மலர்கள், வீடு, விலங்குகள், அலைவாய்க்கரையில், முள்ளும் மலர்ந்தது, வளைக்கரம், கரிப்பு மணிகள், சேற்றில் மனிதர்கள் உள்பட ஏராளமான -நாவல்கள் ; காலம் தோறும் பெண் – ஆய்வு, இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆகியுள்ளன.
ஸர்மிளா சய்யீத்: உம்மத், சிறகு முளைத்த பெண், ஒவ்வா, சிவப்புச் சட்டை சிறுமி.
ஆர்.சூடாமணி: தனிமைத் தளிர், இரவுச் சுடர், இருவர் கண்டனர், தீயினில் தூசு,உள்ளக்கடல், ஆழ்கடல், செந்தாழை உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர். தமிழக அரசு கலைஞர் கருணாநிதி விருது,தமிழ் வளர்ச்சித் துறைப்பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர்.
இளம்பிறை: வனாந்திரத் தனிப்பயணி
தமிழ்நதி: சூரியன் தனித்தலையும் பகல், இரவுகளில் பொழியும் துயரப்பனி, பார்த்தீனியம், தேவதைகளும் கைவிட்ட தேசம்
வாசந்தி: நினைவில் பதிந்த சுவடுகள் உட்பட ஏராளமான நாவல்கள்.
மாலதி மைத்ரி: விடுதலையை எழுதுதல், நீரின்றி அமையாது உலகு, எனது மதுக்குடுவை,சங்கராபரணி, நீலி, நம் தந்தையரைக் கொல்வதெப்படி, வெட்ட வெளிச்சிறை, முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை, கடல் ஒரு நீலச்சொல், மர்லின் மன்றோக்கள், பேய் மொழி ஆகிய 11 நூல்கள்; அணங்கு கட்டுரைகள், பறத்தல் அதன் சுதந்திரம் -ஆகிய இரு நூல்களின் தொகுப்பாசிரியர். அணங்கு இதழ் தொகுப்பாசிரியர், அமீபா சிற்றிதழ் நடத்தியவர்
அவ்வை: எதை நினைந்து அழுவதும் சாத்தியமில்லை
ஊர்வசி: இன்னும் வராத சேதி
கீதா சுகுமாரன்: ஒற்றைப் பகடையில் எஞ்சும் நம்பிக்கை
ப்ரேமா ரேவதி: யாக்கையில் நீலம்
உமாமகேஸ்வரி: இறுதிப்பூ, யாரும் யாருடனும் இல்லை, எல்லோருக்கும் உண்டு புனைபெயர்.
எஸ்.தேன்மொழி: துறவி நண்டு.-எஸ்.ஆர்.வி.படைப்பூக்க விருது பெற்றவர்.
கவிதா: சந்தியாவின் முத்தம்
வினோதினி: முகமூடி செய்பவள்.
எழிலரசி: மிதக்கும் மகரந்தம்
பெருந்தேவி: இக்கடல் இச்சுவை, உலோகருசி
லதா: பாம்புக்காட்டில் ஒரு தாழை
பூரணி: பூரணி கவிதைகள், பூரணி நினைவலைகள் உட்பட நான்கு தொகுதிகள். 92 வயது கடந்த பிறகும் எழுதியவர். க்ருஷாங்கினியின் தாயார்.
தமிழினி: ஒரு கூர்வாளின் நிழலில்
இந்திரா: நீர் பிறக்கு முன்
இந்திராகாந்திஅலங்காரம்: ரெட்சன், நீட்சே-வாழ்வும் தத்துவமும் – ஒர் அறிமுகம், 26-11-மும்பைத் தாக்குதல் தரும் படிப்பினைகள், அம்பேத்கரின் வழித்தடத்தில் வரலாற்று நினைவுகள்-நான்கு மொழிபெயர்ப்பு நூல்கள்; மெரினாவில் கார்ல்மார்க்ஸ் – சிறுகதைத்தொகுதி
அ.வெண்ணிலா: கங்காபுரம், நீரதிகாரம், சாலாம்புரி ஆகிய மூன்று நாவல்கள்; நீரில் அலையும் முகம், கனவிருந்த கூடு, ஆதியில் சொற்கள் இருந்தன, கனவைப் போலொரு மரணம், இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம், இரவு வரைந்த ஒவியம், படு சுடர் தண்டாக்காதல் – உள்பட எட்டுக் கவிதைத் தொகுதிகள் ; பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்.. உள்பட நான்கு சிறுகதைத் தொகுதிகள் ; ஆறு கட்டுரைத் தொகுதிகள் ; நிகழ்முகம்-நேர்காணல்கள், மூன்று தொகுப்பு நூல்கள். இவரின் முனைவர் பட்ட ஆய்வு நூல்: தேவரடியார் – கலையே வாழ்வாக : தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை, எஸ்.ஆர். வி -அறக்கட்டளை விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.
லதா ராமகிருஷ்ணன்: க்யுபாவின் இலக்கியத் தடம் – மொழிபெயர்ப்பு, சிற்றகல் – சிறு பத்திரிகைகளில் வெளியான சிறந்த கவிதைகளின் தொகுப்பு நூலின் ஆசிரியர். ஏராளமான மொழிபெயர்ப்புப் படைப்புகளின் ஆசிரியர்.
வை.மு.கோதைநாயகி: 120 க்கு மேல் நாவல்களைத் தன் ஜகன்மோகினி இதழ் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவை நாட்டுடைமை ஆனவை.
மூவலூர் ராமாமிர்தம்: தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்.
சு.தமிழ்ச்செல்வி: ஆறுகாட்டுத்துறை, கீதாரி, அளம்., பொன்னாச்சரம் உள்படப் பல நாவல்கள், சிறுகதைத்தொகுதிகள்
ப.சிவகாமி: பழையன கழிதலும், ஆனந்தாயி, இடது கால் நுழைவு
சக்தி அருளானந்தம்: இருண்மையிலிருந்து, பறவைகள் புறக்கணித்த நகரம்.
சக்தி ஜோதி: கடந்த ஒன்பதாண்டுகளில் பத்துக் கவிதைத் தொகுதிகள், சங்கப் பெண்பாற் புலவர்களையும், நவீன பெண் எழுத்துகளையும் ஒப்பிட்டு எழுதி வருபவர்.சங்க இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு.
க்ருஷாங்கினி: கானல் சதுரம்-கவிதைத் தொகுதி, சமகாலப் புள்ளிகள், க்ருஷாங்கினி கதைகள் – சிறுகதைத் தொகுதிகள், மற்றும் பறத்தல் அதன் சுதந்திரம், கலைகள் – வாழ்க்கை – சில பதிவுகள்- மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தொகுதி உட்பட ஏழு தொகுப்பு நூல்களின் ஆசிரியர்; ஓவியர்.
வத்சலா: வட்டத்துள் சதுரம், கண்ணுக்குள் சற்றுப் பயணித்து.
ச.விஜயலக்ஷ்மி: பூவெளிப் பெண், பெண்ணெழுத்து-களமும் அரசியலும், எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை, லண்டாய்-ஆஃப்கன் கவிதைகள் மொழிபெயர்ப்பு, என் வனதேவதை. ஜயந்தன் விருது பெற்றவர். ஆசிரியர்.
கவின்மலர்: நீளும் கனவு – சிறுகதைத் தொகுதி, சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்-கட்டுரைத்தொகுதி, மீரா நந்தாவின் ‘இந்தியா காட்டும் ஆன்மிகத்தோற்றம் – நம்பலாமா, வேண்டாமா என்ற நேர்காணல் நூலைத் தமிழில் ஒரு சிறு நூல் வடிவில்; எருமைத்தேசியம் என்ற தமிழாக்க நூலும் இவர் தந்ததே. திரை இசையும், வீதி நாடகமும் இவரின் ஏனைய ஆர்வங்கள். இந்தியா டு டே தமிழ்ப்பதிப்பு உள்படப் பல பத்திரிகைகளில் பணி செய்தவர். தொலைக்காட்சி ஊடகவியலாளர்.
பா.ஜீவசுந்தரி: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வரலாற்று நூல், ஒரு ரசிகையின் பார்வையில், அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும், உள்படப் பல நூல்கள். திரைப்படம்,, அரசியல்,பெண்ணியம் சார்ந்த பல தொடர் கட்டுரைகளின் ஆசிரியர்.
திலகபாமா: கழுவேற்றப்பட்ட மீன்கள்
தமிழச்சி தங்கபாண்டியன்: எஞ்ஜோட்டுப்பெண், வனப்பேச்சி, மஞ்சனத்தி, பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை, காலமும் கவிதையும், காற்று கொணர்ந்தகடிதங்கள் (தொகுப்பு) பாம்படம், சொல் தொடும் தூரம், பேச்சரவம் கேட்டிலையோ, அருகன்.
மலர்வதி: தூப்புக்காரி (சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் பெற்ற நாவல்), காட்டுக்குட்டி,
பி.எஸ். அஜிதா: சரிபாதிப் பெண்கள் சமமானவர்கள்தானா?
ஜோதிர்லதா க்ரிஜா: மணிக்கொடி, உள்பட ஏராளமான படைப்புகளின் ஆசிரியர்.
சிவசங்கரி: எதற்காக, தியாகு உள்பட ஏராளமான நாவல்கள், கதைத்தொகுதிகள். இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – பிறமொழி எழுத்தாளர்கள் சந்திப்புப் பதிவுகள்
இந்துமதி: மலர்களிலே அவள் மல்லிகை, தரையில் இறங்கும் விமானங்கள் உள்படப் பல நாவல்கள்,கதைத்தொகுதிகள்.
அமரந்த்தா: வியப்பூட்டும் கூபா, கியூபா – மேற்குலகின் விடிவெள்ளி- (பேரா. சே. கோச்சடையுடன் இணைந்து ), ரான் ரைடனவர் எழுதிய வெனிசுவேலாவின் ஓசைகள் நூல் மொழிபெயர்ப்பு, மலைகள் எம்மிடம் திரும்பும், ஹொசே மார்த்தி – ஓர் அறிமுகம், வீழ்வேனென்று நினைத்தாயோ உட்படப் பல காத்திரமான மொழிபெயர்ப்பு நூல்களைத் தமிழில் தந்தவர்.
கலைச்செல்வி: இரவு, ஒரு சிறுகதைத் தொகுப்பும் இரண்டு நாவல்களும்
கு.ப.சேது அம்மாள்: கு.ப.ரா.வின் சகோதரி.இவரின் படைப்புகள் நாட்டுடைமை ஆனவை.
ஜானகி லெனின்: எனது கணவனும் ஏனைய விலங்குகளும் (தமிழில்: கே.ஆர். லெனின்) உள்பட வன விலங்குகள் தொடர்பான நூல்கள்.
முபின் சாதிகா: கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்.
தி.பரமேஸ்வரி: எனக்கான வெளிச்சம்,-தனியள், ஓசை புதையும் வெளி
லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம்: புதுமைப்பித்தன், மவுனி, அம்பை, பாமா, உட்படபல சிறந்த படைப்பாளிகளின் நவீன இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் அடாவடிப் பெண்களின் அராஜகச் சொற்கள் வரை ஆங்கிலம் வழி பரந்த உலகிற்குப் பயணம் செய்தன. கடந்த ஆண்டு மறைந்தார்.
கமலா புதுமைப்பித்தன்: புதுமைப்பித்தனின் சம்சார பந்தம்
கே.வி.ஷைலஜா: பசி – காதல் – பித்து – வாழ்வியல் கட்டுரைகளின் தொகுதி; கலை ஆளுமைகளின் காலடித்தடங்கள் – பயண இலக்கியம்; சிதம்பர ரகசியம் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு நினைவுகள் – மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு; இறுதி யாத்திரை – எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மலையாள நாவல்., தென்னிந்தியச் சிறுகதைகள் தொகுப்பு., மூன்றாம் பிறை-நடிகர் மம்முட்டி வாழ்வனுபவங்கள், நவீனச்சிறுகதைகள் தொகுப்பு உட்பட பல மலையாள நூல்களின் மொழிபெயர்ப்பாளர்.
கே.வி.ஜெயஸ்ரீ: அல்போன்ஸம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும், நிலம் பூத்து மலர்ந்த நாள், ஹிமாலயம், உஷ்ண ராசி உட்பட 22 மொழிபெயர்ப்பு நூல்கள். சாகித்திய அகாடமியின் மொழிபெயரப்புக்கான விருது பெற்றவர்.
பேரா.சோ.மோகனா: சமூகப்போராளிகள், முதல் பெண், எதிர்பாராத கண்டுபிடிப்புகள், சூரிய மண்டலம், வேதியியல் கதைகள், உலகம் சுற்றலாம் வாங்க, பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள், உட்பட பல அறிவியல் நூல்களின் ஆசிரியர். இவரின் சுயசரிதை நூலான ‘இரும்புப்பெண்மணி மோகனா’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பாரதி பாஸ்கர்: முதல் குரல் உட்பட பல நூல்கள்
மதுமிதா: மக்கள் கவி யோகி வேமனர் பாடல்கள் ஆயிரம்-தொகுப்பு
வைதேகி பாலாஜி: பெண்களுக்கான சட்டங்கள்
உ.வாசுகி: பெண்ணியம் பேசலாம் வாங்க, பெண்-வன்முறையற்ற வாழ்வை நோக்கி, கணக்குப் பார்ப்போம் கணக்குத் தீர்ப்போம்
டாக்டர் ஷாலினி: பென்ணின் மறுபக்கம் உட்பட பல உளவியல் சார்ந்த வழிகாட்டி நூல்கள்
மனுஷி: ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள், குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள், முத்தங்களின் கடவுள்
தேவி சந்திரா : மனிதநேயத்தை நோக்கி உள்பட பல சிறுகதைத்தொகுப்புகள், நாவல்கள்.
பெ.பானுமதி: வங்கமொழிச்சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
காம்கேர் புவனேச்வரி: நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள் உட்பட கணினி பற்றிய பல நூல்கள்
வ.கீதா: பெரியார் பற்றிய பல ஆய்வுநூல்கள் (எஸ்.வி.ராஜதுரையுடன் இணைந்து,) பாலினப் பாகுபாடுகளும் சமூக அடையாளங்களும் (க்றிஸ்டி சுபத்ராவுடன் இணைந்து ), சாதியும் பால்நிலைப்பாடும்-உமா சக்கரவர்த்தியின் நூல் தமிழாக்கம்.
த.ஜீவலக்ஷ்மி: கட்டுரையாளர், கவிஞர்
ஆண்டாள் பிரியதர்ஷினி: கதாநாயகி உட்பட பல நாவல்கள், கவிதைத் தொகுதிகள்
கனிமொழி – கருவறை வாசனை, அகத்திணை, சிகரங்களில் உறைகிறது காலம்
லிவிங்ஸ்மைல் வித்யா: நான் சரவணன் அல்ல, மெல்ல விலகும் பனித்திரை-திருநங்கையர் குறித்த சிறுகதைகள் தொகுப்பாளர்
கெளரி கிருபானந்தன் : சுஜாதா, தொடுவானம் தொட்டுவிடும் தூரம், ஒரு பெண்ணின் கதை, மீட்சி, சிறகுகள் உள்பட, ஓல்காவின் தெலுங்கு நாவல்கள் மொழிபெயர்ப்புகள்.
வ.அம்பிகா: புதிய கதைகள், அறிவியல் குறுக்கெழுத்துப் புதிர்கள்
அம்பிகா நடராஜன்: சிறுத்தைக்குட்டியின் கேள்விகள் எளிய அறிவியல்கலந்துரையாடல்கள், டாம் மாமாவின் குடிசை விமலா மேனனின் நான் மந்தாகினி பேசுகிறேன் – மொழிபெயர்ப்பு.
பூங்கனல்: நிலாவைப் பருகிய நாட்கள்
க.பாலபாரதி: சில பொய்களும் சில உண்மைகளும், எரிக்கும் பூ, மக்கள் சேவையில் மலர்ந்த தோழர் என்.வரதராசன்
கனிமொழி. ஜி: கோடை நகர்ந்த கதை, நடந்தோடிய நெகிழ்நிலம்
புவனா நடராஜன்: கடைசி நமஸ்காரம், சந்தோஷ் குமார்கோஷ் நூல், மகாஸ்வேதாதேவி சிறுகதைகள் போன்ற மொழிபெயர்ப்புகள். தமிழ், ஆங்கிலம், இந்தி, வங்காளி, சமஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகள் கற்றவர். மொழிபெயர்ப் புப்பணிகளுக்காகச் சாகித்திய அகாதமி விருது, திருப்பூர்த் தமிழ்ச்சங்கம், திசை எட்டும் இதழ் விருகளையும் பெற்றவர். வங்காளி மொழியிலிருந்து மட்டுமே 22 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். எஸ். ஐ இ டி கல்லூரியின் சார்பில் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தரப்பட்டுள்ளது.
அழகியநாயகி அம்மாள்: கவலை – நாவல்
லட்சுமி அம்மாள்: லட்சுமி என்னும் பயணி – தன்வரலாறு
ஏ.எஸ்.பத்மாவதி: கல்வி,கற்பித்தல் திறன் வளர்ப்புப் பயிற்சிகள், பெண்ணியம் போன்ற பல்வேறு பொருண்மைகளில் பயிற்சிககையேடுகள், நூல்கள்,கட்டுரைகளின் ஆசிரியர். பயிற்றுநர்.
ஜெயந்தி சங்கர்: 5 நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு, உள்ளிட்ட 34 நூல்களை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூர் இலக்கிய விருது உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர்.இடி தெய்வத்தின் பரிசு உள்ளிட்டவை.
அ.மங்கை: தேரி காதை- பவுத்த பிக்குணிகளின் பாடல்கள் மொழிபெயர்ப்பு, எதிரொலிக்கும் கரவொலிகள்-அரவாணிகளும் மனிதர்களே, ஈழப் பெண் கவிதைகளின் தொகுப்பு உட்பட பல நூல்களின் தொகுப்பாளர், நாடக நெறியாளர்.
குட்டி ரேவதி: பூனையைப் போல் அலையும் வெளிச்சம், முலைகள், முள்ளிவாய்க்காலுக்குப்பின் உட்பட பல நூல்கள். ’பனிக்குடம் இதழின் பொறுப்பாசிரியர்.’
பேரா.எஸ்.ஹேமா: கர்னாடக இசையின் கதை, பெண்களும் சோஷலிஸமும்-மொழிபெயர்ப்பு,
பேரா.ஆர்.சந்திரா: தண்ணீர் தண்ணீர் தண்ணீர், நாங்கள் வரலாறு படைத்தோம், மலராத அரும்புகள், ஹர்கிஷன்சிங்சுர்ஜித்தின் இந்திய விவசாயிகள் இயக்கத்தின் வரலாறு, இந்திய விடுதலைப் போராளிகள்-பார்வதி மேனன்,
அ.பிரேமா: யாரோடு பேச?, பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்
ஜெயராணி: கடந்த 25 ஆண்டுகளாகப் பல்வேறு தமிழ் ஊடகங்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர். ஜாதியற்றவளின் குரல், உங்கள் மனிதம் ஜாதியற்றதா?, உங்கள் குழந்தை யாருடையது?, எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை, இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம், கருப்பு மைக் குறிப்புகள் ஆகிய கட்டுரை நூல்களின் ஆசிரியர். செந்நிலம் என்ற தலைப்பில் இவரின் முதல் சிறுகதைத்தொகுதி சாலட் பதிப்பக வெளியீடாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியாகியுள்ளது. விகடன் விருது, கனடா தமிழ்த்தோட்ட விருது, வாசகசாலை விருது, திராவிடர் கழகத்தின் பெரியார் விருது உள்படப் பல விருதுகளையும்,பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
மைதிலி சிவராமன்: வாழ்க்கையின் துகள்கள், மகாத்மாவின் மனைவி எழுப்பும் கேள்விகள், வெண்மணி, இரு வேறு உலகங்கள்
மீனா: அ.மார்க்ஸ் – நேர்காணல்கள், அ.மார்க்ஸின் படைப்புகள் பர்றிய இரு நூல்கள்.
இரா.ஜானகி: சங்க இலக்கியப் பதிப்புரைகள்
முத்துமீனாட்சி: வால்காவிலிருந்து கங்கை வரை (ராகுல்ஜி நூல் மொழிபெயர்ப்பு.), புதிய உலகம்-மொழிபெயர்ப்புக் கதைகள், உலக இலக்கிய வரிசை தொகுப்பு-2
இன்பா சுப்ரமணியன்: வையாசி-19 நாவல்
சசிகலா பாபு: சொல்லக்கூடாத உறவுகள், ஒரு கடல் இரு நிலம், சூனியப்புள்ளியில் பெண், பெர்சியாவின் மூன்று இளவரசர்கள், இஸ்மத் சுக்தாய் எழுதிய ‘ வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை’ என்ற சுயசரிதை உள்பட ஏராளமான நூல்களின் மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க எழுத்தாளர் ஜான் ஸ்டீன்பெக்கின் ”ஏதேனுக்குக் கிழக்கே” நாவலைத் தமிழில் மொழிபெயர்க்கிறார்.
ஜெயசாந்தி: பரணி நாவல்
மு.ரா.மஜிதா பர்வீன்: ஆய்வாளர்
கல்பனா சேக்கிழார்: ஆய்வாளர்.
பத்மாவதி விவேகானந்தன்: ஆய்வாளர்.தமிழ்ச்சிறுகதைகள், பெண்ணியம் சார்ந்த பல ஆய்வு நூல்களின் ஆசிரியர்.
பாரததேவி: நிலாக்கள் தூரதூரமாக, மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன.
சுமதி ராம்: கோடிட்ட இடங்களை நிரப்புதல்
கா.தாமரை: பொய்யும் அழகானதுதான்
பத்மினி: மறைய மறுக்கும் வரலாறு (தலித்திய பண்பாட்டுக் கட்டுரைகள்)தொகுப்பு.
இரெ .மிதிலா: பெண் எழுத்து
லீனா மணிமேகலை: பரத்தையர்களுள் ராணி உட்பட பல தொகுதிகள். செங்கடல், தேவதைகள் உட்பட சிறந்த ஆவணப்படங்களை இயக்கியவர்.
கலை இலக்கியா: இமைக்குள் நழுவியவள், என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன், பிரம்ம நிறைவு, ஒப்பாரிப் பாடல்கள் தொகுப்பு, குறுந்தொகையின் காமத்துப்பால் பற்றிய கட்டுரை நூல்கள் – மொத்தம் எட்டு. நுரையீரல் புற்று நோயால் மிக இளம்வயதிலேயே இவரின் வாழ்க்கை- இலக்கியப் பயணங்கள் முடிந்து போயின என்பதுதான் பெரும் சோகம்.
மு.காமாட்சி: ஆய்வாளர்
உமா சக்தி: வேட்கையின் நிறம்
சுகந்தி சுப்ரமணியன்: புதையுண்ட வாழ்க்கை, (1988), மீண்டெழுதலின் ரகசியம் (2003)
ரத்திகா: தேய்பிறையின் முதல்நாளிலிருந்து
பாரதி கிருஷ்ணன்: களவு போன கனவு, தேன் துளிகளும் எறும்புகளும், கணவன், காதலன், தோழன்
ஃபஹீமா ஜகான்: ஒரு கடல் நீரூற்றி, அபராதி, ஆதித்துயர்
சுபமுகி: ரசாயனப் பொடிக் கோலம்
கீதாஞ்சலி பிரியதர்ஷினி: அவனைப் போல ஒரு கவிதை, திருமதியாகிய நான், -கவிதைத் தொகுதிகள்; மறந்து போன குரல்கள்-சிறுகதைத் தொகுப்பு.
நளினி: மனசே டென்ஷன் ப்ளீஸ்
சந்தியா ராவ்: ஒரே உலகம்-ராதிகா மேனன் மொழிபெயர்ப்பு நூல் உள்படப் பல சிறார் நூல்களை மொழிபெயர்த்து வருகிறார்.
கேத்தரின்: புவியியலைப் புரிந்து கொள்வோம்
ஷர்மிளா: பைத்தியக்காரி -கவிதை
து.சரஸ்வதி: என்ன செய்வீங்க-நாவல்
இரா.செல்வி: பெண்மையச் சிந்தனைகள்
செ.பவானி: தமிழொளியின் சிறுகதைகள்
வி.அமலோற்பவமேரி: தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்
முனைவர் பெ.நிர்மலா: தமிழ்ப்பண்பாட்டில் பால்வேற்றுமைப் பதிவுகள் (பெண் தொன்மம் குறித்த பதிவுகள்)
நறுமுகை தேவி: சாத்தான்களின் அந்தப்புரம்
ஸ்வாதி முகில்: எலக்ட்ரா
சுதந்திரவல்லி: பட்டணத்து ரயிலை கிராமத்தை நோக்கி கொண்டு வந்தவள்.
பாலைவன லாந்தர்: உப்புவயலெங்கும் கண்கள், மீளி
எம்.ஏ.சுசீலா: தாஸ்தயேவ்ஸ்கியின் அசடன், குற்றமும் தண்டனையும், உள்படப் பல நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.ஒரு நாவலும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.
நா.அனுராதா: காளி- சிறுகதைத்தொகுப்பு
பிரேமா நந்தகுமார்: மகாகவி பாரதி வரலாறு, சமன் நாஹல் நூலான விடுதலை நூல் (மொழிபெயர்ப்பு) உட்பட பலநூல்களை சாகித்ய அகாடமிக்காக எழுதிய முன்னோடி எழுத்தாளர்.
தமயந்தி: அந்தி வானின் ஆயிரம் வெள்ளி, ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும், சிறுகதைத்தொகுதி உட்பட பல கதைத் தொகுதிகள்.
பா.அருள்செல்வி-அம்மாவோடு-முதலிய கதைகள்.சாலை விபத்தில் அநியாயமாக மரணம் அடைந்தவர்.
ந.சுப்புலக்ஷ்மி: நேஷனல் புக் ட்ரஸ்ட் தமிழ்ப்புத்தகப் பிரிவின் இயக்குனராக இருந்தவர். இரண்டு நாவல்களும் சிறுகதைகளும் எழுதியவர்.புற்று நோயால் மறைவு.
உமா மோகன்: டார்வின் படிக்காத குருவி, ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம், துயரங்களின் பின் வாசல், நீங்கள் உங்களைப் போல் இல்லை – ஆகிய கவிதைத் தொகுதிகள் ‘வெயில் புராணம்’ – பயண நூல்.
ஏ. இராஜலட்சுமி: எனக்கான காற்று, நீயும், நானும், – கவிதை நூல்கள்; ‘ஆக்கமும் பெண்ணாலே’ – ‘சங்கப் பெண் புலவர்கள் பாடல்களில் பெண்’ – ஆய்வு நூல்கள்.
பேரா.கே.பாரதி: தமிழ் சினிமாவில் பெண்கள், ஆர்.சூடாமணி (இந்திய இலக்கியச் சிற்பிகள், சாகித்ய அகாடமிக்காக)
கோவை ஞானி நடத்திய இதழ் தொகுப்புகளில் ஒரு மூன்றாண்டு காலம் சிறுகதைப்போட்டிகள் நடத்தி பல நல்ல கதைகளைத் தொடர்ந்து வெளியீட்டிருந்தார். அவ்வாறு தேர்வு செய்யபட்டு ஒவ்வொரு சிறுகதை எழுதியவர்கள்: வள்ளி, ஜூலியட் ராஜ், ஜானகி ரமணன், மாலதி, ரமணி பிரசாத், இரா.கயல்விழி, தென்றல், எஸ்.புனிதவல்லி, ஷீபா, டெய்சி மாறன், என்.விஜயலக்ஷ்மி, அனு.வெண்ணிலா, குணவதி, அனுஷா, ஸ்ரீப்பிரியா, பி.கிருத்திகா, எம்.கே.செந்தமிழ்ச்செல்வி, ஆர்.பேபி, சஞ்ஜீவி, கோ.பொற்கலை, சாதனா ராதாகிருஷ்ணன், மகிமை பிரகாசி
ரமாதேவி ரத்தினசாமி – சுயம்பு – தடம் பாதிக்கும் சாதனைப்பெண்கள்
கீதா இளங்கோவன் – துப்பட்டா போடுங்க தோழி, நோ ஆணி,ப்ளீஸ் – ஆகிய இரு நூல்கள்; மாதவிடாய், ஜாதிகள் இருக்கேடி பாப்பா, அறிணைகள்,ஆராயாத் தீர்ப்பு -ஆகிய குறும்படங்களின் படைப்பாளி
நிவேதிதா லூயிஸ் – அறியப்படாத கிறித்துவம் என்ற ஒரு பெரும் ஆய்வு நூல், முதல் பெண்கள், அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது உள்படப் பல நூல்களின் ஆசிரியர் ; வரலாற்றாய்வாளர், பெண்ணிய ஆய்வாளர், ஹர் ஸ்டோரீஸ் பதிப்பகத்தின் இணை நிறுவனர், சலியாத பயணி,
ஜி. ஈஸ்வரி குருநாதன் : மிளிர்ந்தா – வலிகளிலிருந்து மீள்பவள், தன்னம்பிக் கையால் மிளிர்பவள் – நாவல்; நிலவொளியில் நினைவலைகள் – கவிதை நூல், தென்றல் பேசும் மௌனங்கள் – கவிதைத்தொகுதி ஆகிய மூன்று நூல்கள் எழுதியிருக்கிறார்.
முனைவர் செங்கொடி – ஆய்வாளர், கல்லூரியில் துணைப்பேராசிரியர். ஈழத் தமிழரின் புலம் பெயர் இலக்கியம், வலியின் மொழிபெயர்ப்புகள் ஆகிய இரு ஆய்வு நூல்களின் ஆசிரியர்.
சுஜாதா செல்வராஜ் – காலங்களைக் கடந்து வருபவன், கடலைக் களவாடுபவள் ஆகிய இரு கவிதை நூல்களின் ஆசிரியர். தற்போது காலச்சுவடு, உயிர் எழுத்து முதலிய இதழ்களில் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.
எஸ்,தேவி – கோவை,ஈரோடு போன்ற பல மாவட்டங்களில் சுமங்கலித் திட்டம் போன்ற பெயர்களில் பெரும் பஞ்சாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு வகையான கொத்தடிமைத் திட்டத்தில் இளம்பெண்கள் மூன்றாண்டுகள் வரை தொழிற்சாலைகளில் வேலை செய்து இறுதியில் மொத்தமாக 50,000 / போலத்தொகையும் ஒன்று அல்லது இரண்டு பவுன் நகையும் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவலங்களைப் பற்றிய ‘பற் சக்கரம்’ நாவலின் ஆசிரியர். இந்த நாவலுக்குத் த. மு. எ. க. ச.சிறந்த நாவல் விருது உள்பட மூன்று விருதுகள் பெற்றிருக்கிறார்.
சரிதா ஜோ – சிறந்த கதைசொல்லி. ஏராளமான சிறார் இலக்கிய நூல்களின் ஆசிரியர்.த மு எ க சங்க விருது,படைப்புக் குழும விருது, லட்சுமி அம்மாள் விருது உள்பட இவர் பெற்றிருக்கும் விருதுகளும் மிக நீண்ட பட்டியலில் அடங்குபவையாக உள்ளன. சமீப நாள்களில் பெரியவர்களுக்கான கதைசொல்லியாகவும் ஆகியிருக்கிறார். முக்கிய நூல்கள் : சரஸ்வதிக்கு என்ன ஆச்சு?, கடலுக்கு அடியில் மர்மம், மந்திரக் கிலுகிலுப்பை,பேயாவது பிசாசாவது போன்றவை.
கி. அமுதா செல்வி – பசி கொண்ட இரவு என்ற இவரின் முதல் சிறுகதைத் தொகுதி த மு எ க சங்கம், திருப்பூர்த் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றது. சிறார்களுக்காக வால் முளைத்த பட்டம், புயலுக்குப் பின் (இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) – ஆகிய இரு நூல்களை எழுதியிருக்கிறார்.
ஈரோடு ஷர்மிளா – மகிழினி I f s , துணிச்சல்காரி, மந்திரச்சங்கும் பப்பிக்குட்டியும், கோடைக் குதூகலம், ஆந்தையும் மரங்கொத்தியும், எவஞ் சொன்னது ராஜான்னு – ஆகிய சிறார் நூல்களின் ஆசிரியர். இவரின் முனைவர் ஆய்வுப்பட்ட நூல்: எம். ஜி. சுரேஷ் நாவல்களில் ‘பின் நவீனத்துவம்.’ ச தமிழ்நாடு அரசு வாசிப்பு இயக்கத்தின் மாநிலக்கருத்தாளர். தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் வெளியிட்ட தொகுப்பில் கோடைக் குதூகலம் கதை; சிறார் எழுத்தாளர் சுகுமாரன் தொகுத்த 100 சிறந்த சிறார் கதைகள் தொகுப்பில் இவரின் இரு கதைகள் இடம் பெற்றுள்ளன. பள்ளிக்கல்வி இயக்கத்தின் சிறார் வாசிப்பு நூல்களில் 6 சிறு நூல்கள் இவருடையவை.
பூங்கொடி பாலமுருகன் – ஆசிரியர், கதைசொல்லி. சரிதா ஜோ வுடன் இணைந்து சாவ்பாடி என்ற நூலும், இவர் தனது சொந்தப்படைப்புகளாக இருவாச்சி சாமி, கால் முளைத்த மீன், வாங்க பேசலாம் பதின்பருவம், புரியாத புதிர், என்னைத்தொடாதே ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
ச.முத்துக்குமாரி – ஆசிரியர். வாசிப்பு இயக்கம்,இல்லம் தேடிக்கல்வி போன்று பள்ளிக்கல்வித்துறையின் களப்பணித் திட்டங்களில் மாநிலக் கருத்தாளர். இவர் எழுதியுள்ள நூல்கள்: டாமிக்குட்டி, புத்தகக் கண்காட்சிக்கு ஏன் வர வேண்டும்?, குட்டி யானை, நிலாவின் பொம்மை, கேள்வி கேட்டுப் பழகு, ஓ ஒ ஓ பேயா ? ஆகிய ஆறு.
ராணி குணசீலி – ஆசிரியர், இல்லம் தேடிக்கல்வித்திட்டத்தின் மாநிலக் கருத்தாளர். வானத்தில் பறக்கலாம், வா!, ஊர் சுற்றலாம், புத்தகக்கண்காட்சிக்கு ஏன் வர வேண்டும் (ச. முத்துக்குமாரியுடன் இணைந்து), தேனீ சிறுவர் பாடல்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர்.
லட்சுமி பாலகிருஷ்ணன் – உயர்ந்த உள்ளங்கள் (பகுதி- 1,2), நெல் விளைந்த கதை, ஆனந்தவல்லி (நாவல்), மானசா – ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. ஆட்டிசம் காரணமாகப் பாதிக்கப்படும் குழந்தைகளின் நலன் கருதித் தொடர்ந்து களப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சாலை செல்வம்: சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர். அசிம் பிரேம்ஜி நிறுவனத்தில் பணி செய்கிறார். பெண்ணியம்,சிறார் இலக்கியம் சார்ந்த களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். யாரேனும் இந்த மவுனத்தைத் தகர்த்திருந்தால், தம்பி தொலைந்து போனான், மனிதர்கள் குரங்கான கதை, கலாப் பாட்டியும் நிலாப்பேத்தியும், அம்மாவின் சூப் (பிரான்ஸ் நாட்டுக்கதை), வாழ்வியலாகும் கல்வி உள்பட ஏராளமான நூல்களின் ஆசிரியர்.
தேவி நாச்சியப்பன் : சிறார் இலக்கியத்துக்கான, சாகித்திய அகாடமியின் பால புரஷ்கார் விருது பெற்றவர். தேன் சிட்டுக்கு என்னாச்சு?, பயணப்புறாவில் பறப்போமா, Let Us Fly On The passenger Pigeon – ஆகிய நூல்களின் ஆசிரியர்.
பிரியசகி: நன்மைகளின் கருவூலம், எது அழகு, நாம்… நாம், கண்டேன் புதையலை, ஆறாம் செய்யப்பழகு ஆகிய நூல்களின் ஆசிரியர்.
சூடாமணி (சிறார் எழுத்தாளர்): மிருக தேசம், அம்மாவைத்தேடி…, எம் மண்ணின் நட்சத்திரங்கள், ஏன் பூமி, ஏன், எப்படி, எப்போது? ஆகியவை இவரின் படைப்புகள்.
கார்த்திகா கவின் குமார் : கல்லூரிப் பேராசிரியர். சிறார் எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர். தொல்காப்பிய நூலை எளிய முறையில் விளக்கும் ஆய்வு நூலின் இரு பகுதிகள் ஏற்கெனவே நூல் வடிவில் வெளிவந்துள்ளன. தற்போது முற்றிலும் புதிய வடிவில் மூன்று பகுதிகளாக அதை விரிவு படுத்தி வெளியிட அணியமாக உள்ளார். குப்பை மேனிகள் – சிறுகதைகள், அகப்பை முகங்கள் – கவிதைகள், கேக்கின் பிறந்த நாள் – ஆகிய மூன்று நூல்களின் ஆசிரியர். சிறந்த கதைசொல்லி. கதை சொல்லிகள், என்ற இணைய வழிக் குழுவின் ஒருங்கிணைப் பாளர். களப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பவர்.
ராஜிலா ரிஜ்வான் – ஒண்ணாப்பு அலப்பறைகள்; பெரியோன் – நாவல்.
சி. வனிதாமணி – சிறந்த கதைசொல்லி. ‘ கதை சொல்லியின் பயணம் ‘ நூலின் ஆசிரியர்.
சுகன்யா ராமநாதன் – சிறந்த கதைசொல்லி. ‘கதை உலகம் குழுவில் தொடர்ந்து கதைகள் சொல்கிறார். தீக்கதிர் வண்ணக்கதிர் இணைப்பில் சில கதைகளையும் எழுதியிருக்கிறார்.
இராஜேஸ்வரி கோதண்டம் – தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். சிறந்த மொழிபெயர்ப்பு நூல்க ளுக்காக தமிழ்நாடு அரசின் ஜி. யு. போப் விருது, கலை இலக்கியப்பெருமன்ற விருது, திசை எட்டும் இதழின் விருது உள்படப் பல விருதுகள் பெற்றிருக்கிறார். தெலுங்கு மொழியின் மூத்த கவிஞர் வேமனரின் பாடல்களை ‘வேமன பதிகங்கள்’ என்ற தலைப்பிலும், ஸ்ரீ ராமானுஜரின் வரலாறு குறித்த ஒரு நூலைக் ‘கருணை விழிகள்’ என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்துள்ளார். நடுவேயுள்ள தொலைவு, உள்ளக்குமுறல் (ஆப்கானிஸ்தான் – அமெரிக்கா இடையிலான போர் பற்றிய நீள்கவிதை), மைனா, சாம்பய்யா, பேம்பி போன்ற பல நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு இவருடையது.
ஞா. கலையரசி – நிலாப்பாட்டி, மந்திரக்குடை, நீலமலைப்பயணம், சுட்டிச்சுண்டெலி, பறக்கும் பூ நாய், வைக்கம் வீரர் பெரியார், பால சாகித்திய புரஷ்கார் விருது வென்ற படைப்புகள் – ஆகிய நூல்களை எழுதியுள்ளார். பூஞ்சிட்டு மின்னிதழில் தொடர்ந்து சிறார் கதைகள், பாடல்கள், மொழிபெயர்ப்புக் கதைகள் உள்ளிட்ட பல வகைப் படைப்புகளை எழுதி வருகிறார்.
தா. கமலா – ‘நான் ஏன் ஆசிரியர் ஆனேன் ?’
லதா அருணாச்சலம் – தீக்கொன்றை மலரும் பருவம், பிராப்ளமஸ்கி விடுதி, ஆக்டோபசின் பேத்தி (ஆப்பிரிக்கச் சிறுகதைகள்), ஆயிரத்தொரு கத்திகள், சொர்க்கத்தின் பறவைகள் – ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர்.
எஸ். சுஜாதா : துளிர் அறிவியல் மாத இதழ் மூலம் அறிமுகமாகித் தொடர்ந்து கடந்த 27 ஆண்டுகளாகப் பத்திரிகையுலகில் பணிகள் செய்கிறார். கோகுலம், துளிர், பிராடிகி போன்ற இதழ்கள் / பதிப்புகளின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது இந்து தமிழ் திசை நாளிதழின் ‘மாயா பஜார்இ’ ணைப்பிதழின் பொறுப்பாளர். ஏராளமான சிறார் இலக்கிய நூல்கள், உலகை மாற்றிய பெண்கள் குறித்த தொடர், பெண் மனம் எனும் இணையப்பத்தி, விலங்கினங்கள் பற்றிய தொடர் – இவை குறிப்பிடத்தக்கவை. இவரின் முதல் நாவல் : ‘ஆண்ட்ரூஸ் விடுதி – அறை எண் – ஏதுமில்லை’. ‘எதிர் நீச்சல்’ என்ற கட்டுரைத்தொகுப்பு ( இந்து தமிழ் திசை இதழில் தொடராக வந்தவை) -ஆகியன சமீபத்திய நூல்கள்.
பிரித்திகா – விட்டில் – கவிதைத்தொகுதி, நூல் அறிமுகக் கட்டுரைகளின் ஆசிரியர்.
ஜனகா நீக்கிலாஸ் – வனமெல்லாம் புதிர் – சிறந்த அறிவியல் புனைவுக்கான 2024 -ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற படைப்பு
பேரா ப. கல்பனா – பேரா. ரவிக்குமாருடன் இணைந்து ஜப்பானிய, பர்மிய, சீன, மணிப்பூரி மொழிக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். ‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ என்ற இவரின் கவிதைத்தொகுப்பு இவரைப் பரவலாக அறிமுகம் செய்தது.
இவள் பாரதி – புதிய தலைமுறை இதழின் துணையாசிரியர். ‘புதிய தலைமுறைப் பெண்’ இதழின் செயல் நிர்வாக ஆசிரியர். பிரபல எஃப். எம். வானொலியின் ஜாக்கி. நக்கீரன்,குமுதம் இணைய மேடைகளில் எண்ணியல் ஊடகவியலாளர். ‘நம் பப்ளி கேஷன்ஸ்’ பதிப்பகம், ‘நம் தமிழ் மீடியா’ என்ற இணைய ஊடகம் ஆகியவற்றையும் நிறுவி நடத்துகிறார். இதுவரை 190 நூல்களை இவர் வெளியீட்டிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய சாதனை. குழந்தைகள், முதல் தலைமுறை எழுத்தாளர்களின் நூல்களை வெளியீடுவாதி பேரார்வம் கொண்டவர். தன்னம்பிக்கையூட்டும் சுய முன்னேற்றக் கருத்தாளர். சுதந்திரம், சொற்களின் வாசனை, சிறு கை அளாவிய கூழ், நான் சொல்வதெல்லாம், சில தேன்துளிகளும் எறும்புகளும், தவிர்க்க இயலாத காரணத்தால் உள்பட இவரின் சொந்தப்படைப்புகள் 25 க்கு மேல் வெளியாகியுள்ளன.
பத்மஜா நாராயணன் – ‘நான் மலாலா’, ‘தடங்கள்.
சஹிதா – அன்புள்ள ஏவாளுக்கு, ஆயிரம் சூரியப் பேரொளி
கவிஞர் முருகேஷ்வரி – ‘ம்ம் மா ‘ கவிதை நூல்.
ஜெ. தீபலட்சுமி – சே கு வேரா – ஒரு போராளியின் வாழ்க்கை – இரு பாகங்களில் ஒரு பெரும் வரலாற்று நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
நர்மதா தேவி – பெண் – அன்றும் இன்றும் – ஒரு விரிந்த ஆய்வு நூல்.
பா. விமலாதேவி – சீழ்க்கை – கவிதைத் தொகுப்பு
கயல்.S. – வேலூர் கல்லூரியில் உதவிப் பேராசிரியர். ஏற்கெனவே கல்லூஞ்சல், மழைக் குருவி, ஆரண்யம், ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் ஆகிய நான்கு கவிதைத் தொகுதிகள் வெளி வந்துள்ளன. இப்போது உயிரளபெடை தொகுப்பு ஐந்தாவதாக வந்துள்ளது.