விருதுநகர் புத்தகத் திருவிழாவில், நரவேட்டை நாவலின் இரண்டாம் பதிப்பை தமுஎகச மூத்த தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர் அர்ஜூனன், மூத்த தலைவர் தோழர் பாலசுப்பிரமணியன் பங்கேற்று பிரதிகளை பெற்றுக்கொண்டு வாழ்த்தினர். தமுஎகச மாவட்டச் செயலாளர் தோழர் லட்சுமிகாந்தன், மாநிலத் துணைச் செயலாளர் மணிமாறன், எழுத்தாளர் ஜா.மாதவராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். தோழர்கள் ஜே.ஜே.சீனிவாசன், சிவா, சுமதி, நண்பர்கள் கார்த்தி, ராஜரத்தினம், ராஜ், பெருமாள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
previous post