1949களில் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின், தமிழ்நாட்டுக் கிளையின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழாவினை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறையும், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழுவும் இணைந்து செப்டம்பர் 23 அன்று பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் முன்னெடுத்தது. ஆய்வரங்கம், உரையரங்கம், ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசளிப்பு என நாள் முழுவதும் விழா நடைபெற்றது.
அதன் ஓர் அங்கமாக மாலை நிகழ்வில் கவிஞர் தமிழ்ஒளியின் 8 கதைகள் கொண்ட குருவிப்பட்டி சிறுகதைத் தொகுப்பை அன்றைய உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் க.பொன்முடி வெளியிட்டு நிறைவுரையாற்றினார். மாண்புமிகு அமைச்சருடன் இணைந்து, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு தலைவர் சிகரம் செந்தில்நாதன், செயலாளர் இரா.தெ.முத்து, பேராசிரியர்கள் ஆ.ஏகாம்பரம், கோ.பழனி, முனைவர் அ.உமர்பாரூக், எழுத்தாளர் களப்பிரன், நாடகக்கலைஞர் அசோக்சிங் ஆகியோர் குருவிப்பட்டி சிறுகதைத் தொகுப்பை இணைந்து வெளியிட்டனர். l
previous post
