ஆணியாய் அறையப்படும் கல்வியை விதைகளாய் தூவுவது எப்படி?
கல்வி என்பது ஒருவரின் வாழ்நாள் செயற்பாடு. மனிதசமூகம், தன்னைப் பிணைத்திருக்கிற அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு கல்வியே பிரதானம் இத்தகு சிறப்புவாய்ந்த கல்வியினைக் கற்பிக்கும் பணிக்கு வருகிற எந்த ஒருவரும் தான் முதலில் கற்றுத் தெளியவேண்டும். நல்லாசிரியர் விருது வாங்க விரும்புகிற ஆசிரியர் இப்புத்தகங்களைப் படிக்கத் தவறிவிடக்கூடாது.
தாய்மொழிவழிக் கல்வியை உலகம் முழுவதிலும் எல்லா நாடுகளின் சிந்தனையாளர்களும் ஒன்றுபோல வலியுறுத்துகிறார்களே; ஏன் என்றறிய இவற்றைப் படியுங்கள். இளம் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் உளவியலும், உடலியலும், அழகியலும், அறிவியலும் எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்து செயற்படுகின்றன என்றறிய இவற்றைப் படியுங்கள். இட ஒதுக்கீடும், கல்வியில் சமத்துவமும் எப்படி ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதவை என இப்புத்தகங்கள் நிறுவுகின்றன. உடலுழைப்பைவிட அறிவு மேன்மையானதல்ல எனச் சொல்கின்றன.
கல்வி ஓர் அரசியல் | வே.வசந்திதேவி ரூ.240
இன்றைய தாழ்வுகள், கேவலங்கள், கொடுமைகள், ஊழல்கள், அநீதிகள், வன்முறைகள் இவற்றிற்கெல்லாம் மாற்று எங்கிருந்தாவது தோன்ற முடியும் என்றால், அது கல்வியில் இருந்துதான் பிறக்கமுடியுமென நான் நம்புகிறேன்” என்று நிமிர்ந்து நின்று பேசும் வசந்திதேவியின் வார்த்தைகளில் சக்தியும் சத்தியமும் ஒருங்கெழுந்து மிளிர்கின்றன. கல்வி என அவர் குறிப்பிடுவது, வகுப்பறைக் கல்வி வகுப்பறைக்கு வெளியே வாழ்க்கை வெளியில் கிடைக்கும் கல்வி இரண்டையும் சேர்த்துத்தான்…
வன்முறையில்லா வகுப்பறை | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.110
21ஆம் நூற்றாண்டு ஆசிரியர்களின் தோழன் இந்நூல்… லட்சக்கணக்கான மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான உளவியல் நூல்கள், உலகளாவிய மாற்றுவழி… கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லாத பயிற்றுமுறை வன்முறையில்லாத வகுப்பறைநோக்கி புதியபாதை அமைக்கிறார்.
இது யாருடைய வகுப்பறை | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.250
ஒருபுறம் வியாபாரம் ஆகிவிட்ட கல்வி மறுபுறத்தில் பாடப்புத்தகம், வகுப்பறை, மனப்பாடம், தேர்வு, மீண்டும் தேர்வு, மீண்டும் மீண்டும் தேர்வு, ரேங்க் என மதிப்பெண்ணை நோக்கி மாணவர்களை விரட்டும் இன்றையக் கல்விச் சூழலில் நமது பள்ளிக் கல்வியை மாறுபட்ட கோணத்தில் உலகளவில் ஆய்வு செய்கிறது இந்நூல்.
கல்விச் சிந்தனைகள்: அம்பேத்கர் | தொகுப்பு:ரவிக்குமார் ரூ.75 பக்.80 இந்தியச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களின் கல்விப் பிரச்சனைகளை அலசி ஆராய்கிறார் அம்பேத்கர்.
அவர்களிடையே உயர்தரக் கல்வியின் முன்னேற்றத்தைக் கவனித்து, அம்பேத்கர் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்:
பொதுக் கல்வி, சட்டக்கல்வித் துறைகளில் திருப்திகரமான முன்னேற்றம்; விஞ்ஞானம், பொறியியற் கல்வி எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை. வெளிநாடுகளின் பல்கலைக்கழகங்களில் உயர்தரக் கல்வி கற்பது என்பது எட்டாக் கனியாக உள்ளது…
பல்கலைக் கழகச் சீர்திருத்தம் பற்றி ஆராய்வதற்காக அரசு அமைத்த குழுவின் வினாப் பட்டியலுக்கு, விடையளிக்கத் தகுந்தவை என்று தாம் கருதியவற்றுக்கு விடைகளும், எழுத்து மூலமான சாட்சியமும் அளிக்கையில் தர்க்கரீதியான பல வாதங்களை முன் வைக்கிறார்.
கல்விச் சிந்தனைகள்: லெனின் | தொகுப்பு; ஏ. ஜெ. பெனடிக்ட் | ரூ.150
சோவியத் ரஷ்யாவில் பல கல்விசார் முயற்சிளைத் தாமே தலைமைதாங்கி லெனின் முன்னெடுத்திருக்கிறார். சோவியத் ஒன்றியத்தைப் போல் கல்விக்கு முக்கியத்துவம் அளித்த நாடு உலகில் வேறெதுமில்லை. சமூக அமைப்பும் – கல்வியும், சமூக வர்க்கங்களும் – கல்வியும் உற்பத்தி உழைப்பும் பல் தொழில்நுட்பக் கல்வியும், கல்வியும் பண்பாடும் ஆகிய நான்கு தலைப்புகளே நூலின் உள்ளடக்கச் செறிவை விளக்குவனவாக அமைந்துள்ளன.
கல்விச் சிந்தனைகள்: காந்தி | தொகுப்பு: அ.அண்ணாமலை ரூ.120 பக்: 144
தாய்மொழி மூலமே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம்நாட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்பு உள்ளதாக இருக்க வேண்டும்; மிகவும் ஏழையான இந்தியன்கூட மிகச் சிறந்த கல்வி பெறுவதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பவை காந்தியின் கல்விச் சிந்தனைகள்.
கல்வித் திட்டத்தை வகுப்பதும், அதை நிறைவேற்றுவதும் இரண்டுமே மக்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். பணத்தைப் பொறுத்ததாக கல்வி இருக்கக்கூடாது.
கல்விச் சிந்தனைகள்: பாரதியார் | தொகுப்பு: ந.ரவீந்திரன் | ரூ.180 | பக்.192
மனுஷ்ய ஜாதியின் விடுதலை, தேசியக் கல்வி – இவ்விரண்டு பெருங்காரியங்களைத் தொடங்குவதற்கு இப்போது காலம் மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று விடுதலைப் போராட்டத்தையும், தேசியக் கல்வியையும் இணைத்துச் சிந்தித்தவர் பாரதி. ஆசிரியர்கள், மலைகளாகவும், அணைக்கட்டுகளாகவும் விளங்கவேண்டும், அப்போது மாணவர்கள் ஆறுகளாகப் பெருகுவார்கள், சாஸ்திர நன்செய்கள் சாலவும் பயன்படும் என்பது அவரின் நம்பிக்கை. நூல்களை எல்லாம் பாடசாலைகளில் தமிழ்மொழி வாயிலாகவே கற்பிக்க வேண்டும்.
கல்விச் சிந்தனைகள்: தாகூர் |தொ:ஞாலன் சுப்பிரமணியன் | ரூ.125 ப. 128
நமக்கு முதலாவது தேவை கற்று, பண்பட்ட உள்ளந்தான். நாடு சீர்கேடு அடையும் நிலையில், மக்கள் எழுத்தறிவின்றி அவல நிலையில் இருக்கும்போது அதைப் பார்த்துக் கொண்டு சும்மா கிடப்பதா என்ன? தாகூரின் குமுறல் மிக்க கல்விச் சிந்தனைகள் இந்நூலில் வெளிப்படுகின்றன.
கல்விச் சிந்தனைகள்: பெரியார் | அ.மார்க்ஸ் ரூ.130
கல்வியால் மக்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மேன்மையான வாழ்வுக்கு என்றும் பயன்பட வேண்டும் என பெரியார் குறிப்பிடுகிறார்.
கற்க, கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி|வசீலி அலெக்சாந்திரவிச் சுகம்லீன்ஸ்கி மறுவரைவு: அ. வள்ளிநாயகம், வ.அம்பிகா, | ரூ: 130 | பக் : 144
‘இதயம் தருவோம் குழந்தைகளுக்கு… என்ற தலைப்பில் சோவியத் நாட்டில் மிகப் பிரபலமான நூல் இது. சுகம்லீன்ஸ்கி, இறுதி நாள் வரை பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்து மறைந்தவர். ‘தாய் தந்தையின் இதய பூர்வப் பிரியம், விவேகம் நிறைந்த கண்டிப்பு, கடுமை ஆகியவை ஒன்றுகலந்த ஆழமான அன்பு, மனிதத் தன்மை ஆகியவை ஆசிரியரின் முக்கியப் பண்புகளிற் சிலவாகும்என்பது இவரின் கருத்து. வெயிலுக்கும் குளிருக்கும் அச்சப்படாத வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டுமென்கிறார். ‘குழந்தை உருவங்களாகச் சிந்திக்கிறது; பெருவெள்ளமாக அறிவைக் குழந்தை மீது கொட்டாதீர்கள்; மனித சிந்தனையின் சாதனைகள் அளவற்றவை. ஒரு புத்தகத்திலுள்ள அழகை, விவேகத்தை, சிந்தனையின் ஆழத்தைக் குழந்தைகளுக்கு எடுத்துக் காட்டுங்கள். என தனது சொந்த அனுபவங்களிலிருந்து பல கருத்துகளைப் பதிவு செய்கிறார் வசிலீன்ஸ்கி.
முரண்பாடுகளிலிருந்து கற்றல் | கிருஷ்ணகுமார் தமிழில்: ஜே.ஷாஜஹான் | ரூ.50 சமுதாயத்தில் பண்பாட்டு வாழ்வியலை நீண்டகால ஒத்திசைவுடன் வைத்திருப்பதில் கல்வி பெரும் பொறுப்பேற்கிறது. இந்நிலையில் வரலாற்றைச் ‘சொல்லுதல் எனும் நிலையிலிருந்து ‘கண்டறிதல் எனும் நிலைக்கு உயர்த்தினால் பாடத்திட்டம் பெரும் மாற்றங்கட்கு உள்ளாகும் எனக் கூறுகிறார். அறிவியலும் - சமூகமயமாக்கலும், இரு உலைகள் என்ற அடுத்தடுத்த பகுதிகளிலும் இவ்வாறே முரண்பட்ட கருத்தாக்கங்களின் இருமுனைகளையும் சுட்டிக்காட்டி ஆழமான விவாதங்களுக்கு இட்டுச்செல்கிறார் பேரா.கிருஷ்ணகுமார்.
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை பாவ்லோ ஃப்ரையிரே|தமிழில்: இரா.நடராசன் | ரூ:150 | பக்.176 ‘The Pedagogy of the oppressed’’ என்ற இந்த நூல், வயது வந்தோர் கல்விகற்பித்தல் முறைகள் குறித்துப்பேசுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. கல்வியின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விமரிசனப் பார்வையுடன் ஆராய்கிறது. ‘எடுத்துச் சொல்வது என்ற நோயால் அவதியுறுகிறது இன்றைய கல்வி முறை. இது வங்கிக்கல்வி
எனக் கடுமையான விமரிசனங்களை முன்வைக்கிறார் ஆசிரியர். அவரே இருபது ஆண்டுக்காலம் கடுமையான ஆய்வுகளை களத்தில் நேரடியாக மேற்கொண்டு பல தீர்க்கமான முடிவுகளைக் கண்டடைந்தார். வாழ்வனுபவங்களே அவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியாளராக மாற்றின.
குழந்தைகளைக் கொண்டாடுவோம்
ஷ.அமனஷ்வீலி | தமிழில் : டாக்டர் இரா. பாஸ்கரன் | மறுவரைவு: முனைவர் அ.வள்ளிநாயகம், வ.அம்பிகா. | பக்: 160 | ரூ: 150
மனிதர்களின் பரஸ்பரக் கவனமும், அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும், மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும், புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன. என்கிற ஆசிரியரின் அனுபவக் குறிப்புகளே இந்நூலாக வடிவம் பெற்றுள்ளன. ஆறு வயதுக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் 15 ஆண்டு கால அனுபவங்களின் தொகுப்பு இது. 800 பக்க நாட்குறிப்பிலிருந்து, ஓராண்டு காலத்தின் 5 முக்கிய நாட்களின் பணிப் பதிவுகளை நம் முன் வைக்கிறார் ஆசிரியர். குழந்தையின் எதிர்காலத்திற்கு நான் பொறுப்பானவன் என்கிற நினைவே அவரை இயக்கும் உந்துவிசை.
டேஞ்சர்: ஸ்கூல்! சமகால கல்விகுறித்த உரையாடல்
ஐடிஏசி குழு உறுப்பினர்கள் | தமிழில்:அப்பணசாமி | பக்: 104 | ரூ:180
பள்ளிக் கல்வியை ஓர் இயந்திரமாக உருவகப் படுத்துகிறது இப்புத்தகம். இதன் செயல்பாடு பழுதடைந்திருப்பதைப் படங்கள், உரையாடல்கள் மூலம் நிறுவுகிறது. பணக்காரருக்கு ஒரு கல்வி – ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலை காலங்காலமாக இருப்பதைக் கூறுகிறது. ‘அனைவருக்கும் பொதுவான கல்வி என்பது கிடையவே கிடையாது என்று சொல்கிறது.
எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்| (Reading writing Reality) பாவ்லோ ஃப்ரையிரே | தமிழில்: கமலாலயன் | ரூ: 40
பாவ்லோ ஃப்ரையிரே, தனது ‘ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி முறை நூலில் ‘மக்களின் மீதான கடப்பாடு என்பது அவர்கள் ஒடுக்கப்படும் எதார்தத்தை மாற்றுவதே என்கிறார். காலம் முழுவதும் விளிம்பு நிலை மக்களிடையே கல்வி நெருப்பைப் பற்றவைப்பதற்கே போராடியவர் ஃப்ரையிரே. எழுத்தறிவு – குறிப்பாக, உழைக்கும் மக்களுக்கான கல்வி – ஒரு சமூகத்தின் மாற்றத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை நிரூபித்தவர். தனது நாட்டின் சேரிப் பகுதிகளுக்குத்தான் போனதற்குக் காரணமாயிருந்தவர் மார்க்ஸ் அல்ல; கிறிஸ்து. ஆனால் தான் அங்கு போய்ச் சேர்ந்தபொழுது, தம் மக்களுடைய எதார்த்த நிலைமை தன்னை மார்க்ஸிடம் அனுப்பி வைத்தது’ – என்று ஃப்ரையிரே விவரிக்கிற விதம், நமது மதப்பற்றாளர்களைச் சிந்திக்கச்செய்வதாக இருக்கும்.
இந்த நூல், இந்தியாவிற்கு அவர் வந்தபோது இங்குள்ள செயற்பாட்டாளர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
கல்வியில் நாடகம் | பிரளயன் | ரூ: 40 | பக்: 64
‘கல்வியில் நாடகம்’ (Theatre in education) என்றொரு கருத்தியலை முன்வைத்து நாடகங்களை, பாடங்களைக் கற்பித்தல் முறைமை (Padagogy) யின் ஒரு பகுதியாகவே நாடகப் பிரதியை உருவாக்குகிற கூட்டுசெயற்பாட்டை இணைத்திருக்கிறார் பிரளயன். ஓசூரில் டி.வி.எஸ். அகாடமி மாணவர்களுடன் அவ்வாறு இணைந்து உருவாக்கிய நாடகப் பிரதிகளை முன்வைத்து இந்த நூலைப் படைத்திருக்கிறார்.
முதல் ஆசிரியர் | சிங்கிஸ் அய்மாத்தவ் | தமிழில்: பூ. சோமசுந்தரம் ரூ.75 | பக்.80
நமக்கு அரிச்சுவடி கற்றுத் தந்து, எழுத்தறிவுச் சோலைக்குள் நமது பிஞ்சு விரல்களைப் பற்றி அழைத்துப் போய் உலவி வரச் செய்த அந்த முதல் ஆசிரியரை யாரால் மறக்க முடியும்? இந்த நாவலின் கதாநாயகி அல்டினாயாலும் தனது முதல் ஆசிரியரை மறக்க முடியவில்லை.
வாசிப்பு மற்றும் தேர்வு முறையின் அரசியல்
முனைவர் பாலாஜி சம்பத் | தமிழில்: எம்.காயத்ரி | ரூ: 30 | பக்: 32
தேர்வுகள் (Examinations) தேவையா என்ற இப்புத்தகக் கேள்வி அடிப்படையிலேயே ஆழமான பல பிரச்சனைகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது. நம் சமூகத்தின் சமத்துவமின்மை மற்றும் ஏற்றத்தாழ்வின் நேரடிப் பிரதிபலிப்பு தேர்வு என்கிறது. கற்றல், வாழ்க்கையுடன் தொடர்புடையதாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தால், குழந்தைகளைக் கற்கவைக்க நமக்குத் தேர்வுகள் தேவைப்படாது என்கிறார் ஆசிரியர்.
கதை சொல்லும் கலை | ச. முருகபூபதி | ரூ : 20 பக் : 24
கதை சொல்வதும், கேட்பதுவும் மிகத் தொன்மையான ஒரு செயற்பாடு. இது எந்த வயதினருக்கும் பிடித்தமான ஒரு செயல். குழந்தைகளுக்கு இக்கலையின் பயனை, வெவ்வேறு விதமாக விவரிக்கிறார் ச.முருகபூபதி.
கனவு ஆசிரியர் | தொகுப்பாசிரியர்: க. துளசிதாசன் | ரூ: 120
அசோகமித்திரன், பிரபஞ்சன், ஞாநி, ஆர்.பாலகிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், தியடோர் பாஸ்கரன், இறையன்பு, ச.மாடசாமி, பொன்னீலன், பிரளயன், இரத்தின நடராஜன், த.வி.வெங்கடேஸ்வரன், பாமா, ச.தமிழ்ச்செல்வன், இரா.நடராசன் ட்ராட்ஸ்கி மருது, கீரனூர்ஜாகிர்ராஜா, பவா.செல்லதுரை, க.துளசிதாசன் – ஆகிய 19 பேரும் தமது ‘கனவு ஆசிரியர்’ யார், ஏன் என்ற நினைவுப்பதிவுகளைச் செய்துள்ளனர். ஒவ்வோர் ஆளுமை குறித்தும் மிகச்சிறப்பான அறிமுகக் குறிப்புகள், அவர்களின் புகைப்படங்கள், பின் கட்டுரைகள் என ஒரு சீரான கட்டமைப்பில் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
THE WINGS OF LEARNING (Will RTE Act Survive)
தொகுப்பு : இரா. நடராசன் | ரூ: 110
நீலோத்பால்பாசு, கல்விச் சிந்தனையாளர்கள் அனில் சட்கோபால், பத்மா சாரங்கபாணி, ஜெயதி கோஷ், ஆர். கிருஷ்ணகுமார், கிரண்பாட்டி, ஆகியோர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளை இரா.நடராசன் தொகுத்துத் தந்திருக்கிறார்.
ஓய்ந்திருக்கலாகாது… கல்விச் சிறுகதைகள்
தொகுப்பு: அரசி ஆதி | வள்ளியப்பன் | ரூ: 120 பக். 144
சுந்தரராமசாமி, பூமணி, கிருஷ்ணன்நம்பி, பாவண்ணன், தமிழ்ச்செல்வன், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், மேலாண்மை பொன்னுச்சாமி, சு.வேணுகோபால், பாமா, தோப்பில் முகமது மீரான், லட்சுமண பெருமாள், ச.பாலமுருகன் – ஆகிய 13 படைப்பாளிகள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அனைத்தும் பள்ளிக்கல்வி, கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் செயல்படும் பள்ளிகள், அங்கு பிரம்பும் கையுமாக வாத்தியார்கள், அடிவாங்கி கைவீங்கி நொம்பலப்படும் மாணவர்கள் – குறித்த கதைகளே.
நூலகங்களுக்குள் ஒரு பயணம் | கமலாலயன் | ரூ.15
உலகின் முதல் நூலகம் எங்கிருந்தது? இந்தியாவில் முதல் நூலகம்? தமிழகத்தில்? என்கிற வரலாற்றுக் கேள்விகளுடன் தன் பயணத்தைத் துவங்கும் இப்புத்தகம் மிகப் பெரிய நூலகங்களான நாகார்ச்சுன வித்தியாபீடம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழக நூலகம் உள்ளிள்ள பல நூல்கள் குறித்தும் விவரித்துப் பேசுகிறது.
காலம்தோறும் கல்வி | என். மாதவன் | ரூ.90 | பக்.96
உடல் உழைப்பும் மற்றும் மூளை உழைப்பும் இணைந்து கற்பிக்கப்படும் கல்விமுறை குறித்தும் மாணவர்கள் சுயமாகவும் கூட்டாகவும் சிந்திக்கவும் செயல்படவும் விளக்கம் தரும் வகையிலான வகுப்பறைகளைப் பற்றியும் பேசும் புதிய நூல்.
தமிழக பள்ளிக் கல்வி | :ச.சீ.இராசகோபாலன் | ரூ.40 | பக்: 64
சமச்சீர் கல்வியைக் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை அரசு உடனே வெளியிட வேண்டும். மொழிக் கொள்கை, பயிற்றுமொழி, தேசியக் கல்விக் கொள்கை பற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு தெளிவாகத் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஐந்து கல்வி வாரியங்களைக் கலைத்துவிட்டு அனைத்துப் பள்ளிகளுக்குமான ஒரே வாரியத்தை அமைக்க அரசு முற்பட வேண்டும். இராசகோபாலன் முன் வைக்கிற கருத்துகள் நம் அனைவரின் ஆழ்ந்த பரிசீலனைக்கும் உரியவை.
எது நல்ல பள்ளி | தொகுப்பு: த.பரசுராமன் | ரூ: 15 | பக்: 16
பள்ளிக்கூடங்களில் எது நல்ல பள்ளி, எது தரமான பள்ளி என்று நாம் அறிந்து கொள்ள ஒரு பள்ளிக்கு தேர்ச்சி விழுக்காடு மட்டும் போதுமா அல்லது பாடத்திட்டமும், ஆங்கிலத்தில் பேசினால் போதுமா அல்லது இசை, ஓவியம், ஆய்வுக்கூடம், நூலகங்களைப் பயன்படுத்தினால் போதுமா? என்று ஆராயப்படுகிறது இந்த நூலில்.
ஆயிஷா | : இரா. நடராசன¢ | ரூ: 20
ஆயிஷா அவ்வளவு சுலபமாக எதையும் நம்பிவிட மாட்டாள். கேள்விகளைக் கேட்டு பூரணமாக விளக்கம் தேடுபவள் அவள். ஆயிஷாவின் அறிவுத்தாகம் ஆசிரியர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டுகிறது. தாகம் இருந்தாலும் கல்வி மறுக்கப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ? அவர்களுக்கும் இந்தக் கதையில் வரும் ஆசிரியை போன்ற உறுதுணை கிடைக்க வேண்டும்.
இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி? | ந.மணி
இதுகாறும் மிகுந்த அளவிலான குழந்தைகள் பள்ளியை விட்டு விலக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வியின் சிக்கல்களை விவாதிக்கிறது. இந்நூல் கல்வி மறுக்கப்பட்டவர்கள் கூற்றின் மூலம் அறிவது; ஆசிரியர்கள் மாணவர்கள் இடைவெளி, கலைத்திட்டம், பாடத்திட்டம், தன்மைகள், தவறான கற்பித்தல் முறைகள், தேர்வு, தண்டனைகள், கணிதம், ஆங்கிலம் போன்ற பிரச்சனைகள் காரணம் என்று அறிய முடிகிறது. இவையனைத்தும் கல்வி முறையோடு கூடியன. கல்வி அமைப்பை அடியோடு மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று வலியுறுத்துகிறது இந்நூல்.
உலகக் கல்வியாளர்கள்|ஆயிஷா இரா.நடரசான் ரூ.40
உலக அளவில் மாற்றுக் கல்வியை முன் மொழிந்த எட்டு மாமனிதர்களை அறிமுகம் செய்கிறது.
மலாலா கரும்பலகையின் யுத்தம்| இரா.நடராசன் ரூ.50
இது மலாலாவின் கதை மட்டுமல்ல உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கதை.
உலகமயமாக்கலும் பெண் கல்வியும் | சுபா ரூ.25
அனைத்தும் வணிகமயமாகும் இன்றைய சூழலில், நுகர்வு கலாச்சாரமும், பண்பாட்டு சீரழிக்கிறது. பக்கவிளைவுகலாகி பெண் கல்வியை என்பதை விளக்கும் நூல்.
கல்விச் சிந்தனைகள்: பெட்ரண்ட் ரஸல் ரூ.130
எந்த ஒரு கருத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து மாணவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென பெட்ரண்ட ரஸல் கூறுகிறார்.
கல்விச் சிந்தனைகள்: விவேகானந்தர் |அ. கருணாநந்தம் ரூ.70
கல்வி குறித்து விவேகானந்தரது சிந்தனைகள், கருத்துகள், கண்ணோட்டங்கள் எப்படி இருந்தன என்பதை விமர்சனப் பார்வையுடன் கூறும் நூல்.
எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்? | தமிழில்: அப்பணசாமி | ரூ.220
குழந்தைகளை நம்புங்கள். அதைவிட மேலானது எதுவுமில்லை அல்லது அதிகக் கடினம் எதுவுமில்லை.
கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் |தமிழில்: மு.ந.புகழேந்தி ரூ.70
முற்போக்குக் கல்வி அணுகு முறையை ஏற்றுக்கொண்ட கல்வியாளர்கள் வாழ்க்கையும் சிந்தனைகளும் பற்றிய அறிமுகம்.
போயிட்டு வாங்க சார் | ச. மாடசாமி | ரூ.60
முதன்முதலாக ஆசிரியர் மாணவர் உறவை உணர வைத்து, அதன் விளைவாக வாசித்தவரை உருக வைத்தவர் சிப்ஸ்.
இவைகளா கனவு பள்ளிகள்? | பொ.ராஜமாணிக்கம் | ரூ.15
சமமான தரமான கல்வி என்பது எந்த நாட்டிலும் தனியாராலோ, தனியாரின் பங்கேற்பினாலோ கைகூடியதில்லை.
பள்ளிக்கூடத்தேர்தல் | நா.மணி | ரூ.40
கனவு போன்றும் கற்பனை போலவும் மயக்கம் தரும் இதை நிஷப்படுத்திய அனுபவங்களைத்தான் ஒரு ஆசிரியரின் நேரடிக்குரலில் இந்நூல் விவரிக்கிறது.
மீண்டெழும் அரசுப் பள்ளிகள் | நா.மணி | ரூ.15
கல்வி என்ற அடிப்படைத் தேவையின் மீது ஒரு மாயையை உருவாக்கி நம்மை தனியார் பள்ளிகள் சுரண்டுவதில் வியப்பில்லை. அப்பள்ளிகளின் ‘தரம்’ விளம்பரத்தில் மட்டுமே.
உச்சி முகர் | விழியன் | ரூ.55
உலகின் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். அப்படிக் கொண்டாடி, இப்படியும் வாழ்ந்து இன்புறலாம் என்பதற்கான எடுத்துக்காட்டு.
ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் | ஜேனஸ் கோர்ச்சாக் ரூ- 50
பலரும் அவர்களின் குழந்தைகள் பற்றிய அணுகுமுறை எதுவெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவையெல்லாம் மாற்றப்பட வேண்டியவை என்று ஆணித்தரமாக கூறும் புத்தகம்..
பள்ளிக் கல்வி | கல்வியாளர்களின் நேர்காணல் | ரூ.90
புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு.
வகுப்பறைக்கு வெளியே! | இரா.தட்சணாமூர்த்தி| ரூ.60
அரசின் 100% தேர்ச்சிக்கு ஒரு லட்சம் பரிசு என்பது இதிலுள்ள கார்த்திக், செல்வம் போன்று எத்தனை பேரைப் பள்ளிகளை விட்டு விரட்டியது என்பது தெரியாது…
Reading Writing Reality | Paulo Freire Rs. 50
The socio-economic life and gradually transformed them into reformist or revolutionary. In this small book Paulo Freire shares his experience with a group of teachers and activists.
கல்வி வகுப்புவாதம் எதிர்காலம் | ரூ.20
பா.ஜ.க அரசியல் கல்விக் கூடம் எவ்வாறு மதவாத கூடாராமாக மாறிவிடுகிறது என்பதை விரிவாக பேசும் இப்புத்தகம் கல்வியில் அரசியலின் பங்களிப்பை மிகவும் ஆதாரங்கங்களுடன் முன் வைக்கிறது.
மனசாட்சியைக் கொல்லும் மாணவர் நல விடுதிகள் | ப.ஆறுமுகம் | ரூ.15
தமிழக மாணவர்களின் அரசு விடுதிகள் சேரிகளைப் போல இயங்குகின்றன. விடுதி ஒரு வகை முகாம்களைப் போல காட்சி தருகின்றன.
90 சதவீதத்திற்கும் மேலான விடுதிகளில் முறையான கழிப்பறை வசதியும் குடிநீரும் இல்லை. நூலக வசதி உணவு வசதி, மின்சாரம் மருத்துவம் போன்ற அடிப்படை எதுவும் இல்லை. சுகாதாரமற்ற அரசுவிடுதிகளைப் பற்றிய ஆதாரத்துடன் இச்சிறிய புத்தகம் மிகத்தெளிவாகப் பேசுகிறது.
கல்வி காவிமயமாகும் அபாயம் | அப்பணசாமி | ரூ.20
இந்திய கல்வியின் தற்போதை போக்குக்குறித்தும், மத்திய அரசான பா.ஜ.கவின் காவிமய செயல்பாடு குறித்தும் விற்பனை பொருளாக மாறிவரும் கல்விக்கொள்கை பற்றியும் விவரிக்கிறார்.
என் சிவப்புப் பால்பாயிண்ட்பேனா | ச. மாடசாமி | ரூ.80
கல்வி குறித்த இக்கட்டுரைகள் பல்வேறு தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. நகைச்சுவை உணர்வுடன் கேலியான தொனியில் தெளிவான கருத்துக்களை கொண்டுள்ளது.
மொழி என்பது | த. பரசுராமன் | ரூ.45
மொழியைப்பற்றி அறிய முழுமையான புத்தகம் இது. இந்தியாவில் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் மொழியைப்பற்றியத் தகவல்களுடன் மொழி உருவாகும் வீதம், மொழி குறித்த இலக்கணம், எழுத்துமொழி, பேச்சு மொழி போன் கருத்தாக்கங்களை விரிவாக இப்புத்தகம் பேசுகிறது.
இப்படிக்குத் தங்கள் அன்புள்ள… | கி. பார்த்திபராஜா | ரூ.160
இந்நூல் ஆசிரியரிடம், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், நாடகப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் என பலரும் கேட்டக் கேள்விகளும், அவர் தம் பதில்களும் அடங்கிய தொகுப்பு.
தொடக்கக் கல்வியில் நாடகியம் | வேலு சரவணன் | ரூ.70
தொடக்கக்கல்வியை அலைகள் வடிவமாக மாற்ற சிறார்கதைகளும், சிறார் நாடகங்களும் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் தொடக்கக் கல்வியில் நாடகம் என்கிற கலையின் வழியாக மேலும் சிறப்பானதாக மாற்ற முயலும் வழிகளையும் நூலாசிரியரின் அனுபவங்களையும் இந்நூல் பேசுகிறது.
புதிய கல்வி கொள்கை: மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டுமே! | ஆர்.ராமானூஜம் | ரூ.20எளிமையான குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விகுறித்தும், அவர்களது எதிர்காலம் குறித்தும் புதிய கல்விக் கொள்கையை முன்வைத்து விவாதிக்கிறார்.
புதிய கல்விக் கொள்கை பற்றி எரியும் ரோம் ஊர் சுற்றும் நீரோ… | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.15
பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேலையாட்களை தொழில்துறை சார்ந்த சந்தைகளுக்காக உருவாக்க ராஜிவ் காந்தி எப்படி ஒரு கல்விக்கொள்கையை திணித்தாரோ அதேபோல மோடி பரிவாரம் தனது மேக் ஆன் இந்தியா உட்பட தனியார் வர்த்தக நிலையங்களில் குறைந்த கூலி வேலையாட்களை உருவாக்கிக்காட்ட புதிய கல்விக் கொள்கைத் திணிப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டு வருவதை கூறும் புத்தகம்.
புதிய கல்விக் கொள்கை: அபத்தங்களும் ஆபத்துகளும் | அ.மார்க்ஸ் | ரூ.70
புதிய கல்விக் கொள்கையில் வருண தர்மத்தின் அடிப்படையில் இந்துத்துவம் மறைமுகமாகவும் நேரடியாகவும் உள்நுழைவதையும் குறிப்பாக குருக்குல கல்விமுறை, சமஸ்கிருதம் பயிலுதல் போன்றவற்றின் அரசியலை இப்புத்தகம் பேசுகிறது.
இருளும் ஒளியும் | ச. தமிழ்ச்செல்வன் ரூ.160
தமிழகத்தில் அறிவொளி இயக்கத்தின் உணர்ப்பூர்வமான ஒரு அனுபவ பகிர்வு அறிவொளி இயக்கம் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான அனுபவத்தைத் தருகிறது. திருநெல்வேலி மாவட்ட அறிவொளி இயக்கம் பற்றிய வரலாற்றுத் தகவல்களின் பதிவு என்று கூறலாம்.
புத்தக தேவதையின் கதை | பேரா. எஸ்.சிவதாஸ் | தமிழில்: யூமா வாசுகி ரூ.70/-
‘ஆலியா முகம்மத் பேக்’ என்ற பெண். இராக் தாக்கதலின்போது தன் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் அழிந்துவிடாமல் சாகசமாகக் காப்பாற்றினார். அவரை முக்கிய கதாபாத்திரமாக்கி எழுதப்பட்ட நாவல்.
தங்கள் பதிலலை எதிர்பார்த்து… | தொகுப்பு: ச. தமிழ்ச்செல்வன் | ரூ.150
பள்ளி மாணவர்கள் பிரபலங்களுக்கு எழுதிய கடிதங்களும், பிரபலங்கள் மாணவர்களுக்கு எழுதிய கடிதங்கயும் ச. தமிழ்ச்செல்வன் தொகுத்துள்ளார். இது கல்விப் பயிற்சியில் புதிய முயற்சி.
கல்வி உரிமையும் மறுப்பும் | ஜோ.ராஜ்மோகன் | ரூ.30
அனைவருக்கும் கல்வி என்ற முழக்கத்தை முன்வைத்து கல்வி உரிமை சாதாரண மக்களுக்கு எப்படி மறுக்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறார்.
கல்வி: சந்தைக்கான சரக்கல்ல | தொகுப்பு: பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு | ரூ.20
கல்வி என்பது வரலாற்றுப் பூர்வமாக ஒரு சமூகப் பண்பாட்டு செயல்முறையாகும். அது சமுதாயத்தின் மிகப் பரந்த கூட்டு நலன்களின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் படைப்பாக்கத் திறனையும் மனித ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. சமுதாயத்தை ஒரே நிலையில் அப்படியே வைத்திருக்காமல் குடியரசுத் தன்மை, சுதந்திரம், சமத்துவம், நீதி, மானுட மாண்பு, பன்முகத்தன்மை, சமூக நல்லிணக்கம், சமூக அமைதி ஆகிய நாகரிக சமுதாய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்கான சமூக மறு கட்டமைப்பு, சமூக மாற்றத்திற்கான பங்கினை ஆற்றுகிறது கல்வி.
இந்தியக் கல்விப் போராளிகள் | ஆயிஷா இரா. நடராசன் | ரூ.110/-
அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்குக் கல்விப் பணியாற்றிய பழைய தலைமுறைச் செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராசன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள எம்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை, இதன் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால், ஆயிஷா நடராசன் எத்துணை முயற்சி எடுத்து அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைத் தேடிக் கண்டு பிடித்து, கட்டுரைகள் வடித்திருப்பார் என்பது வியப்பை அளிக்கின்றது.
தாய்மொழிக் கல்வி: அரசின் அவலங்கள் | தொகுப்பு: ராஜ்மோகன் | ரூ.90
சமீப காலங்களில் தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை ஊக்குவித்து தாய்மொழிக் கல்வியை எப்படி சீரழிக்கிறது என்பதை விளக்குகிறார்.
உடல் திறக்கும் நாடகநிலம் | ச. முருகபூபதி|ரூ.90
பள்ளியில் நிகழ்தும் குழந்தை நாடகங்களை சமுதாயத்தின் அனைத்து பகுதி மட்டுமின்றி குழந்தைகளின் மனது, அதற்குள் ஒளிந்திருக்கும் அத்தனை உணர்வுகளையும் பிரதிபலித்துள்ளது. இயற்கை வழி ஞானமும், பெற்ற அறிவும் சேர்ந்து, நிறைய பரிசோதனை முயற்சிகள் வழி, இந்த நூலின் வரிகள், படிப்பறிவை விட, பட்டறிவு செய்யும் மாயத்தை விளக்குகிறது.
வீழ்ச்சி நாவல் | சுகுமாறன் | ரூ.210
தன் கல்வித் துறை அனுபவங்களை நாவலாக்கியிருக்கிறார். ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி நிர்வாகம், எப்படி எப்படி உள்ளீடு சிதைந்து வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பவற்றைக் கண்ணாரக் கண்டு, மனதார நொந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார்.
ஆயுதம் செய்வோம் | என்.மாதவன் | ரூ.50
கல்விக் குழப்பங்கள் | மு.சிவகுருநாதன் | ரூ.150
குழந்தைகளின் நூறு மொழிகள் | ச.மாடசாமி | ரூ.90
ஆசிரியராகிய நான், பெரும்பாலும் விதிகளின் உலகத்திலேயே வாழ்ந்துவிட்டேன். “கல்லூரி முதல்வர் நூலகம் வந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாமல், உட்கார்ந்தபடி புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தது ஏன்? ‘என்பது பணியில் சேர்ந்த புதிதில் நான் வாங்கிய மெமோ! விதிகளுக்கு மாற்று இன்னொரு விதியல்ல – விதிகளுக்கு மாற்று உரையாடல் என எனக்கு உணர்த்தியது அறிவொளி. தகவல்கள் அல்ல- மனித உறவுகளே உரையாடலின் முதல் தேவை என்பதையும் அறிவொளி எனக்குப் புரிய வைத்தது.
நீட் கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது ஏன்? | ரூ.25
இது எங்கள் வகுப்பறை | சசிகலா | ரூ. 160
இது எங்கள் வகுப்பறை -வே. சசிகலா உதயகுமார் தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார்.
கண்டேன் புதையலை | பிரியசகி | ரூ. 160
கல்வியாளர் குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான விஷயங்களை எளிமையான மொழிநடையில் விளக்கி எல்லையில்லா கற்றலுக்கு அழைத்துச் செல்லும் நூல் ‘கண்டேன் புதையலை’.
பெனி எனும் சிறுவன் | கிகோ புளூஷி | தமிழில்: யூமா வாசுகி | ரூ. 220
தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில், சிறிய சிறிய கேள்விகளுக்கும், பாவனைகளுக்கும் ஒரு ஆழமான எண்ண ஓட்டமிருக்கும் என்பதை வாழ்ந்து காண்பிக்கிறான் இந்த பெனி.
சிறுவர்கள் தங்களை சிறுவர்கள் என்று உணர்வதில்லை.ஒரு முழுமையான மனிதனாக/மனுஷியாக தான் உணர்கிறார்கள். அவர்களை அப்படி நடத்தவே விரும்புகிறார்கள்.அவர்களின் ஆளுமை மிகவும் உறுதியானது. இதை எல்லாம் பெனியின் மூலம் ரொம்ப அழகாக சொல்லிச் செல்கிறது நாவல்.
My Red Ballpoint Pen | S. Madasamy Translation by M. Kumaresan Rs. 90/-
Professor S.Madasamy, is a prominent educationist in Tamil Nadu, India. He has put long years of service as a college professor. He is best known as one of the prime movers of the Total Literacy Movement of the State of Tamil Nadu. Professor Madasamy with his rich experience as an expert of school education methods and pedagogy, is explaining Educational Psychology with his signature humour and surreptitious simple words which do not reveal the true depth.
THE LEARNING TEACHER | Ayesha Era. Natarasan Ph.D., | Rs.195
ur old system concentrated on knowledge, understanding and application. Competency is a new term for us . UNESCO also underlines the Four pillars of Education for the 21st century as: 1. Learning to know 2. Learning to Do 3. Learning to be 4. Learning to live together This book gives all round essence of all great things from the world of Parallel Education that happened in History. The aim of this book is to encourage the teachers to learn all the above four pillars and actively participate in the 21st century education.
குழந்தைகளின் இதயங்களை நிரப்புவோம் |
க.சரவணன் | ரூ.50
ஆசிரியர் குழந்தை மையக் கல்வியை வற்புறுத்துபவர். பாடநூல்களும் பயிற்று முறைகளும் அதை அடிப்படையாகவே இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. இக்கட்டுரைகளில் இந்த ஆசையும் இதனை ஏற்றுப் பாடநூல்களை எழுதுவோரும், பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் செயல்படுவார்களா என்ற ஆதங்கமும் வெளிப்படுகின்றன. ஆசிரியருடைய நடையின் எளிமையும் அது வெளிப்படுத்தும் உணர்வுகளும் வாசகனைக் கட்டிப் போடுகின்றன. ஆங்காங்கே அவர் சொல்லும் குட்டிக்கதைகள் சுவையைக் கூட்டிச் சிந்திக்க வைக்கின்றன.
பேராசிரியர் க. வின்சென்ட்
சீருடை | கலகலவகுப்பறை சிவா | ரூ.60
ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் திறனை பல்வேறு கருவிகளின் துணைகொண்டு வளர்த்துக் கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும் முடியும். இப்புத்தகத்தில் திரைப்படங்கள் எப்படி ஓர் ஆசிரியருக்கு உதவக்கூடும் என்று தன் அனுபவங்கள் வழியே விளக்கியுள்ளார் கலகலவகுப்பறை சிவா.
எனக்குரிய இடம் எங்கே? | ச. மாடசாமி | ரூ. 120
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. காண்பதற்குச் கண்கள் வேண்டும். இந்தப் புத்தகம்… கல்விக்கூட அனுபவப் பகிர்வு. கனவுகள், சந்தோசங்களின் பதிவு மேகங்களைத் தள்ளிவிட்டுச் சின்னச் சின்ன நட்சத்திரங்களைக் காணும் முயற்சி.
அன்புள்ள மாணவிக்கு | தா.கமலா | ரூ.90
நம் கல்வி சந்திக்கும் பிரச்சனைகள் பல அடுக்குச் சிக்கல் கொண்டவை. அவற்றில் தங்களது வீட்டின் கெடுபிடிகள், மூட நம்பிக்கை சார்ந்த பாகுபாடுகள் கடந்து படிக்க வரும் மாணவிகள் குறித்த பிரச்சனை தனித்து அணுக வேண்டிய ஒன்று.
தூய்மையான பாதுகாப்பான கழிவறை இல்லாதது முதல் பள்ளி செல்லும் பாதையில் சாராயக் கடை இருப்பது வரை அவர்களை நம் கல்வி பல வகைகளில் கை கழுவும் சூழல்களே. இவை விவாதிக்கப்படுவது இல்லை. இளம் பெண் குழந்தை திருமணம், பூப்பெய்திய நாளோடு நிறுத்தி விடுதல், எடுப்பு வேலைக்கும், கட்டிட சித்தாளாகவும் அனுப்பப் படுதல் என அவலங்கள் இன்றும் தொடர்கின்றன.
கல்வியை பெண் குழந்தைகள் போராடி அடைவது எப்படி. அன்றாட வாழ்வின் கற்றல் நடவடிக்கை தொடங்கி பெண் குழந்தைகளின் சுகாதாரம் சுய நம்பிக்கை என ஆசிரியை கமலாவின் இந்த நூல் நேரடியாக மாணவிகளிடமும் ஆசிரியைகளிடமும் பேசுகிறது – ஆயிஷா இரா. நடராசன்
இந்தியக் கல்வியின் இருண்டகாலம் |
தொகுப்பு பேரா.நா.மணி | ரூ. 120
பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் இந்துத்துவ வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து இந்திய முதலாளித்துவ பயணத்தை தொடங்கியது. இந்துத்துவத்திற்கு அதன் இலக்குகளை அடைய உலக கார்ப்பரேட் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இப்போது இந்த வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஆபத்துகளை தடுக்க வேண்டிய பணிகளை உடனடியாக செயல்படுத்துவது, அதற்கான திட்டங்களை வகுப்பது, செய்ய முன் வைப்பது, செயல்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான போராட்ட திட்டங்களை அறிந்து கொள்ள உதவுவதும்…இந்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீதான முதல் விமர்சன நூலாக வெளிவருகிறது.
தேசிய கல்விக் கொள்கை பின்னணி மர்மங்கள் பேரா.தா.சந்திரகுரு | ரூ. 260
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் கல்வித்துறையைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். தன் கல்விசார் அமைப்புகள் மூலமாகச் செய்து வந்திருக்கும் வெளிப்படையான மற்றும் மறைமுகமான முயற்சிகளை இந்நூல் சரியாகத் தொகுத்து வழங்கியிருக்கிறது. இத்தொகுப்பு நமக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக மடைமாற்றம் செய்து பொது அங்கீகார முத்திரையைப்பதிக்கும் பணியை மட்டுமே கஸ்தூரிரங்கன் குழு செய்திருக்கிறது என்கிற அச்சம் தரும் உண்மை இந்நூலில் வெளிப்படுகிறது.
வாழ்வியலாகும் கல்வி | சாலை செல்வம் | ரூ. 110
இந்த நூலில் மாற்றுக் கல்விப் பாதையில் பயணிக்கும் மொத்தம் 17 பள்ளிகளை அவர் தேடித் தேடி அறிமுகம் செய்துள்ளார். நம் கல்வியின் மிகப்பெரிய பலவீனம் போலச் செய்தல் ஆகும். ஒரே போல பிள்ளைகளை பிடித்து இறுக்கி நகலெடுக்கும் போலச் செய்தல், அதற்கு மாற்றாக இந்த நூலில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு ரகமாக உள்ளது. ஏதோ அயல்நாட்டில் இருப்பது அல்ல. நம் தமிழக மண்ணில் உள்ள மாற்றுக்கல்வி சாலைகள் அவை.
தேசிய உயர்கல்வித் தகுதி கட்டமைப்பு எதேச்சதிகார தேசியவாதத்தின் குறியீடு | பேரா. லெ. ஜவகர்நேசன் | ரூ. 85
நம் கல்வியின் நோக்கம் என்ன? இக்கேள்வி நமது இந்திய நாட்டின் வரலாறு எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது மத அடிப்படைவாத சடங்குகளை மேற்கொண்ட மனுதர்ம குலக் கல்வியை பேணிப்பது குருகுலக்கல்வி. இசுலாமிய மதரஸா கல்வியும் மத சம்பிரதாய – கற்றல் என்பதை நோக்கமாகக் கொண்டது. தங்களது ஆட்சியின் பணி செய்யும் வேலை அடிப்படை கல்வி என்றாலும் ஆங்கிலேயர் ஆட்சியின் கல்வி, மெக்காலே வழியில் சமத்துவ கல்வியாகவும் இருந்தது.
கோத்தாரி கமிஷன் கல்வியின் நோக்கம் நம் இந்திய சட்டப்படியான மதசார்பற்ற பிரஜையை உருவாக்குதல் என்பதை நம் கல்வியின் நோக்கமாக அறிவித்து அதுவே தொடர்கிறது. என்றாலும், மத்தியில் ஆளும் பஜகவின் ஆர்.எஸ்.எஸ் ஆதார கல்வி இன்று தனது நோக்கமாக கொண்டிருப்பது எதை என்கிற கருத்தோடு பேராசிரியர் ஜவஹர்நேசனின் இந்த முக்கிய நூல் தொடங்குகிறது. உயர் பிராமணீய காவி அடிப்படைவாத சமூகங்கள் மற்றும் தனது கூட்டாளிகளான சந்தை சக்திகளை உருவாக்குவதே புதியக் கல்விக் கொள்கையின் நோக்கம்.
வகுப்பறை மொழி | மாலினி சீதா | ரூ. 80
மாணவர்களோடு தோழமை கொண்ட கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் ஜனநாயக சுதந்திர வகுப்பறைகளை போராடி நடத்தி வருபவர்களுக்கு மூன்று அம்சங்கள் இயல்பாகவே இருக்கும். ஒன்று, அவர்கள் கற்றலை நிறுத்துவது இல்லை. இரண்டாவது, தன்னிடம் கற்க வரும் மாணவர்களின் உரிமைகளை மதித்தல். மூன்றாவது, கற்றல் கற்பித்தல் என்பது நான்கு சுவர்களுக்குள் வகுப்பறையில் மட்டுமே நடக்கிறது என்பதை மறுத்து, மாணவரின் கற்றல் ஆர்வத்தை வாழ்வின் அங்கமாக்கும் கலையை பேணுதல். இவை வாய்க்கப் பெற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல்-கற்பித்தல் அனுபவங்களை நூலாக பதிவு செய்ய வேண்டும். அது ஏனைய ஆசிரியர்களுக்கு வழிகாட்ட முடியும். அந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியை மாலினி சீதாவின் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
உரையாடும் வகுப்பறைகள்|சு.உமா மகேஸ்வரி| ரூ. 80
அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் எனும் அமைப்பை நடத்தி வருபவர்
சு.உமாமகேஸ்வரி. கைபேசியில், வாட்ஸ்-அப்பில் தத்துவம் பகிர்ந்து சங்கப்பணி முடிந்தது என்று ஒதுங்குபவர் அல்ல. கல்விப் போராளியாக களத்தில் நிற்பவர். கற்றல் – கற்பித்தல் எனும் எல்லையைத் தாண்டி ஒரு சமூக சிந்தனையாளராக பொறி பறக்க செய்பவர். அவரது கல்வி சிக்கல்கள், நூல் சிக்கல்களோடு, அவருக்கு தெரிந்த தீர்வுகளையும் முன்வைத்தது. இந்த அவரது புதிய நூல், மாணவர்களின் இதயத்தை திறந்து காட்டி, நம்மை திகைக்க வைக்கிறது. பணிமுடிப்பு கையேடு என்பதில், அவர் தன் வகுப்பு குழந்தைகளோடு நடத்தும் உரையாடல்களையும் தொகுத்தால் அது இந்த நூலாகவே மலரும்.
கல்வியைத் தேடி | எல். ஜவஹர் நேசன் தமிழில்: கமலாலயன் | ரூ. 490
கல்வியைத் தேடி – தேசியவாதக் கல்வி – எதிர் – சமுதாய உந்துவிசைக் கல்வி. தேசியக் கல்வி கொள்கை 2020 ஓர் எதிர்வினை என்ற நூலை பேராசிரியர் லெ. ஜவஹர் நேசன் என்பவர் தனக்கே உரிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பான முறையில் நம் கல்விச் சமூகத்திற்குக் கொடுத்துள்ளார். இது இவரது ஆகச் சிறந்த பங்களிப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. பல்வேறு கோணங்களில் தேசியவாதக் கல்வி என்ற கோட்பாட்டை மிகச்சிறப்பாக தன் எழுத்தின் ஊடாக விளக்கமாக கூறியிருக்கின்றார். இந்தக் கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பதையும் பல்வேறு நாடுகளில் உள்ள முறைகலையும் இந்தியச் சமூகத்தில் எப்படி கொண்டுவரப்பட்டது என்ற முறைமையையும் மிகச் சிறப்பாக ஆய்வின் வழியாக கூறியுள்ளார்.
மீனவர் சமூக விடுதலைக் கல்வி | ரா.பி.சகேஷ் சந்தியா | ரூ. 70
நம்பிக்கை வறண்டுபோன சமூகம் எதைச் செய்தால் அடுத்த கட்டத்துக்கு நகர முடியும் என்பதைத் தடம் பிடித்து, அதில் பெறும் படிப்பினைகளையும் வெற்றி அனுபவங்களையும் சான்றாக்கி இச்சிறு ஆவணத்தை எழுதியுள்ளார் ஆசிரியர். இது சாய்வுநாற்காலி மேதாவிலாசமல்ல, மீனவர் உள்ளிட்ட அடித்தள மக்கள் நிகழ் நூற்றாண்டில் பயணப்படுவதற்கான கைகாட்டிப் பலகை. பல நூற்றாண்டு கால உரிமை மறுப்புகளையும் கொள்கைத் திணிப்புகளையும் வேர் வரை ஆய்ந்து, மக்களை விடுவித்து அதிகாரப்படுத்துவதற்கான திசைகாட்டி. குடியாட்சிக் கட்டமைப்பில் வாழும் இனக்குழுச் சமூகங்கள் வளர்ச்சியில் தங்களுக்கான பங்கை முனைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஒரேயொரு உபாயம்தான் உண்டு- கல்வியைக் கையிலெடுப்பது. நூலாசிரியர் மையப்படுத்தும் இச்செய்தி, தமிழகக் கடற்கரைகளுக்கானது மட்டுமல்ல, அனைத்து விளிம்புநிலை மக்களுக்குமானது.
சிலேட்டுக்குச்சி | சக. முத்துக்கண்ணன் | ரூ. 110
மாணவர்களின் மனஓட்டங்களை, பகிரமுடியாத சோகங்களை வெளிக்கொணரும் கடிதவழி செயல்பாடுகள் எல்லா பள்ளிகளிலும் தொடரவேண்டும் அது மாணவர்கள் வீட்டிலும், சுற்றுப்புறத்திலும் சந்திக்கின்ற அவலங்களை, அவமானங்களை பட்டியலிடும் அதன்மூலம் அவர்களை மதிப்பெண் குதிரைகளாய் மாற்றாமல் தடுக்க முடியும் மனனம் செய்து மக்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளுதலாகாது சமூகம் சார்ந்த விழிப்புணர்வுகளை, அரசியல்மீதான புரிதலை கற்றுத்தர முயல்வதற்கு பேருதவியாகுமென்பதே இந்நூலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஆசிரியரிடமும், மாணவ மாணவியரிடமும் இந்நூலை வாசிப்பதற்கான தேடலை உருவாக்க வேண்டும்.
நீதி உயர்ந்தமதி கல்வி | முனைவர் என். மாதவன் | ரூ. 170
இந்த புத்தகத்தில் வந்துள்ள கட்டுரைகளில் பலவும் இன்றைய ஆரம்பக்கல்வித் தளத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்டம், கற்பித்தல் முறை, மதிப்பீட்டு முறை, வாசிப்பு பயிற்சி போன்ற விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளன. இந்த கட்டுரைகளை பெரும்பாலும் அவை எழுதப்பட்ட கால ஓட்டத்தின் இயல்புகளை அலசுவதாகவே இருக்கும். சில குறிப்பிட்ட தலைப்புகளையே ஒரே நபர் அணுகுவது என்ற வகையில் சில கட்டுரைகளில் ஒரு சில கருத்துக்கள் மீண்டும் பகிரப்பட்டிருக்கலாம். அது அந்த தலைப்பிலான கருத்தோட்டத்திற்கு வலுசேர்ப்பதாகவே எடுத்தாளப்பட்டுள்ளது.
அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல|ச.மாடசாமி|ரூ.70
முதல் கட்டுரையின் தலைப்பு தான் இந்த நூலுக்கே தலைப்பாக அமைந்துள்ளது. அட்டைப் படத்திற்கும் இந்த முதல் கதைக்கும் தொடர்புள்ளது. இந்தத் தலைப்பை வாசிக்கும் போதே என் மனதிற்குள் இனம்புரியாத கலக்கம் ஏற்படுகிறது. அன்பு என்பது எவ்வளவு உசத்தி என எண்ணிக் கொண்டிருக் கிறோம். ஆனால் அதற்குள்ளும் இத்தனை வித்தைகளா என நமக்குப் புரிய வைக்கிறார். அன்பைத் தந்திரமாக்கிய வித்தையில் பள்ளிகளுக்கே முதன்மைப் பங்கு என School is Dead , Deschooling Society ஆகிய கல்வி நூல்களின் வழியே விளக்குகிறார். முக்கியமாக, இந்தக் கட்டுரை உரைக்கும் வரியான , முகநூல் தந்திரங்களை உருவாக்கிய இன்னொரு பள்ளிக்கூடம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாஸ்தான் பெயில்.. பெயில்தான் பாஸ் | ஆயிஷா இரா.நடராசன் | ரூ. 100
ஹிட்லரின் யுஜெனிக்ஸ் வகை தர சர்வாதிகாரம் (Meritocracy) என்பதே இந்த நுழைவுத்தேர்வு கல்விமுறை என நிருபிக்கிறது இந்த புத்தகம். ஆயிஷா. நடராசனின் ‘பாஸ்தான் பெயில் பெயில்தான் பாஸ்’ ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் வாசிக்கவேண்டிய நூல். தேர்வுகள் குறித்த புதியதொரு சிந்தனை.
நன்மைகளின் கருவூலம் | பிரியசகி, ஜோசப் ஜெயராஜ் | ரூ. 150
குழந்தை வளர்ப்பு குறித்து இத்தொகுப்பில் 26 கட்டுரைகள் உள்ளன. “எந்தக் குழந்தையும், நல்ல குழந்தை தான், மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே” என்ற பாடல், நமக்கெல்லாம் தெரிந்தது தானே? பெற்றோரின் வளர்ப்பும், குடும்பச் சூழ்நிலையுமே, குழந்தை நாளை, நல்ல குடிமகனாக உருவாவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்நூல் பெற்றோரும், இளையோரும் சந்திக்கும் பல பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதோடு அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் உளவியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் முன் வைக்கின்றது.
குழந்தைமையை நெருங்குவோம் | விழியன் | ரூ. 45
“கொரோனா காலம்” தந்த தழும்புகளைத் தடவிப் பார்த்தும் விம்மிக் கொண்டும்தான் நாட்கள் நகர்கிறது அதன் விளைவுகள் ஏராளம். பலரின் வாழ்க்கைகள் பின்னோக்கித் தள்ளியுள்ளது. எதில் அதிகப் பின்னடைவு வாழ்வாதரத்திலா? உடல் ஆரோக்கியத்திலா?, பொருளாதாரத்திலா, குழந்தைகளின் கல்வியிலா?, கலாச்சாரத்திலா? நிச்சயமாக ஈடு செய்ய இயலாத விளைவுகள் அனைத்திலும்தான். ஆனாலும், வளரும் குழந்தகளுக்கான இழப்பு பன்முகத்தன்மைக் கொண்டது. அதனை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை என்றே சொல்லலாம். கற்றதையும் மறந்த கல்விச்சூழல் ஒன்றே நம்மைப் பதற வைக்கிறது..
குழந்தைகளின் இரண்டாண்டு வீடுகளில் முடக்கம் பெற்றோர்களுக்கு மிகப் பெறும் சவாலாக அமைந்தது. இது ஒரு சவாலாக ஏற்றவர்களுக்குத்தான் சவால்.. சவாலை ஏற்ற பெற்றோர்களை உற்சாகமூட்டி ஓட வைக்கும் புத்தகம்தான் விழியனின் “குழந்தைமையை நெருங்குவோம்” தனது சொந்த அனுபவத்தினை குழைத்து ஒரு எழுத்தளராகவும் வரைந்துள்ளதால் இந்தப் புத்தகத்தில் உயிரும் இருக்கிறது.“உங்கள் குழந்தை சரியில்லை என நினைத்தால் உங்களை சரி செய்ய வேண்டியிருக்கிறது என்று பொருள்:” பெலூன்ஸ்கி. அத்தகைய பெற்றோர்களுக்கான வழிகாட்டி புத்தகமாக “குழந்தமையை நெருங்குவோம்” வந்துள்ளது. கொரோனா முடிந்தாலும் தொடர்ந்தாலும் குழந்தை வளர்ப்புக்கான இந்தப் புரிதல்கள் அவசியம்.
கற்றல் என்பது யாதெனில் | ஆயிஷா இரா. நடராசன் | ரூ. 270
“நான்காம் தொழிற்புரட்சியின் விளிம்பில் நாம் நிற்கிறோம்” இந்த செய்தி எத்தனை பேர் கவனத்தில் வந்து சேர்ந்தது. சேர்ந்தாலும் அதற்கு நம்மை, நமது சமூகத்தை தயார்படுத்த என்ன செய்யப் போகிறோம் என்பதை யோசிக்க வைத்துள்ளது என்பதுதான் கேள்வி.. இந்த நான்காம் தொழிற்புரட்சி கடந்த மூன்று தொழிற்புரட்சி போலல்லாமல் பல மாற்றங்களை பெரிய அளவில் பெரிய வீச்சில் அமையும் என்கிறார்கள் அறிஞர்கள். கல்வி பற்றி பேச வந்துவிட்டு தொழிற்புரட்சிப் பற்றி ஏன் நாம் பேச வேண்டும்? இன்று கல்விப் பற்றி பேசும் பலர் தொழிற்புரட்சிக்கும் கல்வி முறைக்குமான தொடர்பை விவாதிப்பதே இல்லை. சமூகத்திலிருந்தும் உலகத்திடமிருந்தும் பிரிக்க முடியாத செயல்பாடு கல்வி என்பதை முழுமையாக விவாதிப்பதே இந்தப் புத்தகம்.
டுஜக்.. டுஜக்..ஒரு அப்பாவின் டைரி | தேனி சுந்தர் | ரூ. 100
குழந்தைகளின் மொழியில், இயல்பான நடையில் அவர்களின் உரையாடல் நடையிலேயே வந்திருக்கும் அற்புதமான ஒரு நூல் டுஜக்.. டுஜக்..குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள் பெற்றோர் தான். பெற்றோர் மட்டுமில்லை குழந்தைகளின் உடன் பிறந்தோரும் உறவினர் வீட்டுக் குழந்தைகளும் கூட அவ்வப்போது ஆசிரியர்களாக மாறி விடுவதை உணர்த்தும் பதிவுகள் இவை..இளம் குழந்தைகளின் பெற்றோராய் இருப்பவர்களும் இருந்தவர்களும் தங்கள் குழந்தைகளின் கொஞ்சல்களை, கெஞ்சல்களை, குறும்புகளை, விசும்பல்களை, அன்பை, பாசத்தை நினைத்து நினைத்து ரசிக்க செய்யும் பதிவுகள் நிரம்பிய நூல் டுஜக்.. டுஜக்.. : ஒரு அப்பாவின் டைரி..!
மழலையர் கல்வி | மரியா மாண்டிசோரி – த: ஆயிஷா இரா. நடராசன் | ரூ. 345
இன்று மழலையர் கல்வி என்பது நம் நாட்டில் ஏறக்குறைய ஒரு சர்ச்சையாக மாறி இருக்கிறது. மூன்று வயதில் மும்மொழிக் கல்வி என்கிறார்களேஞ் அது சாத்தியமா பள்ளிக்கு முந்திய பருவம் – அதன் உளவியல் கூறுகள் என்ன ஒன்னறை வயதில் கல்வி எட்டுவயதில் ராணுவ சேவை எனும் முசோலினியின் திட்டத்தை மாண்டிசோரி ஆதரித்ததுபோல சித்தரிக்கிறார்களே அது உண்மையாஞ் மழலையர் பள்ளி Pre – School எப்படி இருக்கவேண்டும். எப்படி இருக்கக்கூடாது என பரந்து விரிந்து இந்த நூல் அலசுகிறது. பிறந்த குழந்தையின் சுயமான கற்றல் நடவடிக்கைகளை அவரது வழிநின்று வாசிக்க வேண்டிய அவசியம் ஆசிரியர்க்கு மட்டுமல்ல பெற்றோர்களுக்கும் கல்வி சார்ந்த அனைத்துவகை செயற்பாட்டாளர்களுக்கும் உள்ளது.
ரெட் இங்க் | சக. முத்து கண்ணன் | ரூ. 95
குழந்தைகளும், குழந்தைகள் மீது அக்கறை உள்ளவர்களும், தன் குழந்தைமையை மறக்காமல் இருப்பவர்களும், நினைவூட்டிக் கொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ‘ரெட் இங்க்’. எது நடந்தாலும் எப்படி இடர்ப்பட்டாலும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்களுக்கு சொல்லும் ஒரே அறம் “நாங்கள் இருக்கிறோம் உயரப்பற” என்கிற அரவணைப்பும் ஊக்கப்படுத்தும் உள்ளமும்தான் பிள்ளைகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் இணைந்த பள்ளிகளின் உலகத்தைப் பல வகைகளில் வரைந்த அற்புதச் சித்திரங்கள் இச்சிறுகதைகள் கல்விக்கூடங்களில் கண்டெடுத்த நிஜங்களைப் பதிவு செய்திருக்கும் பாங்கு அருமை.
ஆசிரிய வாழ்வினிது|கலகலவகுப்பறை சிவா|ரூ.60
குழந்தைகளோடு கலந்துரையாடும் வரம்பெற்றவர்கள் ஆசிரியர்கள். அதுவே அவர்களை உயிர்ப்போடும் வைக்கிறது. வகுப்பறைக்கு வெளியேயும் நீளும் சில உரையாடல்களின் தொகுப்பே இந்நூல். வகுப்பறை, பள்ளிக்கு வெளியேயும் தொடரும் மாணவர், பெற்றோருடனான நட்பின் சில நிகழ்வுகளின் தொகுப்பே இச்சிறு நூல்.
முதல் வகுப்பு பொதுத் தேர்வு|அண்டனூர்சுரா|ரூ.50
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் மாணவருக்கும் இடையிலான போராட்டமே, இக்கதை. அறிவியலின் திரிபை அறிவியல் அதுவாகவே திருத்திக் கொள்கிறது. வரலாற்றின் திரிபைத் திருத்த ஒரு குரல் தேவைப்படுகிறது. குறியீட்டு கதாபாத்திரங்கள் கொண்ட இக்கதையில், சுரேந்திரனின் குரல் அப்படியான ஒன்று!
இது நம் குழந்தைகளின் வகுப்பறை | சூ.ம. ஜெயசீலன் | ரூ. 140
மாறிவரும் உலகமயச் சூழலில் கல்வி வணிகமாக்கப்பட்டு, தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி வரும் நிலையில், வகுப்பறைச் சூழல், பாடத் திட்டங்களும், மதிப்பெண் சார்ந்த வெற்றி தோல்விகளும் அவ்வப்போது விவாதப் பொருள்களாகி வருகின்றன. இதுபோன்ற நிலையில், கற்றல் – கற்பித்தலில் சமூக அக்கறையுடன் பல்வேறு கூறுகளை இந்நூலில் அணுகியுள்ளார் நூலாசிரியர்.
பள்ளிப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட நினைவுகளையும், சமூகத்தில் பெரும் ஆளுமைகளாக வலம் வருவோர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் அனுபவங்களையும் நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார். மாணவர்களிடம் இயல்பாக உள்ள கற்றல் திறனைக் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும், வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதைப் பயிற்றுவிக்க வேண்டும், கேள்வி கேட்கும் மாணவர்கலை ஊக்கப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கலுக்கு கோரிக்கை விடுக்கிறார்.
கல்வி பயிலும் மாணவர்கள் தாய்மொழியை நன்கு பயில வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூலாசிரியர், மாணவர்களின் குறைகளைச் சொல்ல பெற்றோரை அழைக்கும் ஆசிரியர்கள், அவர்களது திறமையைப் பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் பெற்றோரை அழைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்.
மாணவர்களுக்குப் பாடங்களை இயந்திரத் தனமாகக் கற்பிக்காது, சமூக நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி அவர்கள் மத்தியில் கலந்துரையாடலை ஏற்படுத்த வேண்டும், படிக்கும் பாடத்தை பிற பாடங்களுடன் தொடர்புப்படுத்தி மாணவர்கள் படிக்க வேண்டும் என்கிறார். ஆசிரிய – மாணவ சமுதாயத்துக்கு வழிகாட்டி இந்நூல்.
இந்தியக் கல்வி வரலாறு | எஸ். சுப்பிரமணி | ரூ. 40
அமிர்தா பள்ளிக்கு போகணுமா? | த.வி.வி | ரூ. 45
நம் கல்வி நம் உரிமை | தொகுப்பு: நா.மணி | ரூ. 60
ஆசிரியர் முகமூடி அகற்றி | ச. மாடசாமி | ரூ. 50
கல்வி அறம் | மு.சிவகுருநாதன் | ரூ. 150
கல்வி உரிமை | ரூ. 40
கல்வி: மாநில உரிமை | பேரா. லெ. ஜவஹர் நேசன், ஆதவன் தீட்சண்யா | ரூ. 60
வகுப்பறைக்கு உள்ளே | தட்சிணாமூர்த்தி|ரூ. 60
கரும்பலகைக்கதைகள்| புதுச்சேரிஅன்பழகன்|ரூ.70
புதியன விரும்பு என்ன படிக்கலாம் |
பொன் தனசேகரன் | ரூ. 200
உஷ்… குழந்தைங்க பேசுறாங்க | சூ.ம. ஜெயசீலன் | ரூ. 90
மகள் கீர்த்திக்கு | காயத்ரி சித்தார்த் | ரூ. 130
In Search Of Education | L. Jawahar Nesan | Rs. 270
கரும்பலகைக்கு அப்பால் | கலகல வகுப்பறை சிவா | ரூ. 60
NHEQF: A Symbol of Totalitarian Nationalism | L. Jawahar Nesan | Rs.80
மெல்ல மலரும் ஆசிரியர் | கலகலவகுப்பறை சிவா | ரூ. 80