கே.சச்சிதானந்தன்
முனைவர் து.ரவிக்குமார் எம்.பி
இறக்கும் புன்னகைகள் யாவும் எங்கே போகின்றன?
ஒருநாளில் உயிர்விட்ட புன்னகைகளெல்லாம்
சேர்ந்துதான் அடுத்தநாள் சூரியனாக எழுகின்றனவா?
ஒருநாளில் விட்ட பெருமூச்சுகள் சேர்ந்து
மறுநாள் புயலாக உருவெடுப்பதைப்போல?
அல்லது
வருகைப்பதிவேடுகளிலிருந்தும் தொலைபேசிக்
குறிப்பேடுகளிலிருந்தும்
நீக்கப்பட்ட பெயர்கள்
இன்னொரு உலகாக வளர்கின்றனவா?
ஒவ்வொரு வாழ்வும் ஒரு எரிநட்சத்திரம்
ஒளியைவிட அதிவேகத்தில் காலத்தின் குறுக்கே அது
பாய்கிறது
அதனால்தான் அந்த கணத்தின் பிரகாசிப்பில் நான்
எழுதும் கவிதைகள்
சிதறல்களாக இருக்கின்றன.
