- பேரா. ஜான் சல்ஸ்டன்
நோபல் அறிஞர் - ஆயிஷா இரா. நடராசன்
பேரா. ஜான் சல்ஸ்டன் 2002ம் வருடம் மருத்துவத்துறை நோபல் பரிசு பெற்றார். அறிவியல் மக்களுக்கே என்று நோபல் உரையில் முழங்கியவர். அறிவியல் குறிப்பாக மரபணு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கும் மருந்துகளுக்கும் உரிமம் பெறுவதையும் அந்த கண்டுபிடிப்புகளின் பலன் சாதாரண மக்களுக்கு கிடைக்காமல் செய்வதையும் தனியார் மயமாவதையும் தொடர்ந்து எதிர்த்து வந்தவர். மத வெறிக்கு எதிரான உலக மனிதநேயவாதிகள் அமைப்பினை முன்னெடுத்த 22 நோபல் அறிஞர்களில் ஓருவர். The Triple Helix இதழுக்காக ஜேம்ஸ் கென்னடிக்கு வழங்கிய நேர்காணல் இது. 2018 மார்ச் 6ம் நாள் அறிஞர் சல்ஸ்டன் காலமானார்.
கெலரா ஜெனோமிக்ஸ் நிறுவனத்தை எதிர்த்து… உரிமம் என மரபணு வரன் முறையிடல் Sequencing யுத்தத்தில் முழு வெற்றி பெற முடிந்ததா?
ஜான் சல்ஸ்டன்: பொது மக்கள் குழுமம் மனித டி.என்.ஏ. வரன் முறை வரிசையாக கலை, எந்த கட்டணமும் இன்றி களத்தில் (Public Domain) வெளியிட வைத்ததில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இந்த சர்ச்சையே தேவையில்லாதது. வெட்க கேடானது. எதில் பணம் பார்ப்பது என்றில்லையா மனித மரபணு கட்டுடைப்பு மருத்துவ ரீதியில் மானுடத்திற்கே உதவப்போகும் விசயம். டி.என்.ஏ. வரன்முறையிடல் நாம் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆய்வு முடிவு. அது பணம் கொட்டும் பசுவாக பெர்கின் எல்மர் நிறுவனத்தின் நிர்வாகத்தால் அணுகப்பட்டது. டோனி லாய்ட் போன்ற விஞ்ஞானிகள் லாபம் பார்க்க துடிப்பது துரதிர்ஷடவசமானது. எப்படியோ மக்களுக்கான உரிமை உறுதிபட வென்றது. பிரச்சனையை நாம் கடந்து வந்து விட்டோம்.
மரபணுவியலில் உங்களது நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பு குறித்து?
ஜான் சல்ஸ்டன்: 1966ல் நான் கலிபோர்னியாவின் லா ஜெல்லாவில் சால்க் ஆய்வகத்தில் வேதி உயிரியல் ஆய்வுக்காக இணைந்தேன். விரைவில் பிரான்சிஸ் கிரிக்கும் சிட்னி பெர்னரும் என்னை கேம்பிரிட்ஜ் வருமாறு தூண்டினர். சி.எலிகான்ஸ் எனும் புழுவின் மரபணுவை முற்றிலும் கட்டுடைத்தல். அப்படி செய்ய முடியுமா என்பது முயற்சி. அது நடந்துவிட்டால் மனித மரபணுவை கட்டுடைப்பது எளிதாகிவிடும். ஓரு மில்லிமீட்டர் நீளமே கொண்ட வெப்பமய மண்ணில் வாழும் புழு அது. ரத்த ஓட்டமோ சுவாச ஓட்டமோ ஏதுமற்ற ஆனால் நெளிந்து ஊர்ந்து செல்லும் உயிரி. முதலில் நான் புழுவின் முழுமையான நியூரான் வரை படத்தை அடைந்தேன். பிறகு படிப்படியாக அதன் மரபணு வரன் முறையிடலில் இறங்கினேன். அப்போது டி.என்.ஏ. கட்டுடைத்தல் எனில் என்னவென்று அறிந்தவர்களே மிகக் குறைவு ஏதாவது ஓரு உயிரின் டி.என்.ஏ. கட்டுடைக்கப்பட்டால் போதும் மனித டி.என்.ஏ. கட்டுடைப்பிற்கு வழி தெரிந்துவிடும். என்கிற நிலையில் விரைவில் நான் சி.எலிகான் புழுவின் டி.என்.ஏ.வை முழுமையாக மரபணு வரன் முறையியலுக்கு உட்படுத்தி இருந்தேன். புவியியல் முதலில் முழுமையான மரபணு வன்முறையியலுக்கு உட்படுத்தப்பட்ட முதல் உயிரி சி. எலிகான் அதன் வழியே எங்களால் மனித டி.என்.ஏ. மரபணு வரன்முறையியலுக்குள் நுழைய முடிந்தது. இது தான் எனக்கும் என் சகாக்கள் சிட்னி பெர்னர் மற்றும் ராபர்ட் ஹார்விட்ஸ் ஆகியோருக்கும் 2002ல் நோபல் பரிசு பெற வைத்த கண்டுபிடிப்பு.
கேள்வி: கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அறிவியல் வளர்ந்த அளவிற்கு அறிவியல் சிந்தனை வளரவில்லை என்று உங்கள் சுயசரிதையில் குறிப்பிட காரணம் என்ன?
ஜான் சல்ஸ்டன்: நமக்குத் தேவை அறிவியல் சிந்தனை மிகுந்த மனிதன். அப்படியான அறிவியல் பிரஜையை உருவாக்குவது நம் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். கேம்ப்ரிட்ஜ் நினைப்பதைப் போல சமரச சமாதான பிரஜை அல்ல. ஓரு உதாரணம் தருகிறேன். ஓரு காலத்தில் நம் கேம்ப்ரிட்ஜ் அறிவியல் கல்வி எப்படி இருந்தது. நாங்கள் பட்டதாரி மாணவர் பயிற்சியின் ஆய்வு பாட வேளைகளில் நேரடி ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டோம். தவளையின் இதயத்தை தனித்து பிரித்து ரிங்கர் கலவை நீர்மத்தில் இடுவோம். அது அருமையான நேரடி ஆய்வு. கலவை நீர்மத்திலிருந்து கால்சியத்தை தனித் தெடுத்தால் இதயம் துடிப்பதை நிறுத்திவிடும். கால்சியம் சேர்த்தால் தவளையின் இதயம் துடிக்கத் தொடங்கும் சுய ஆய்வுகளும் உண்டு. சோடியம் ஹைட்ராக்சைடு போடப்பட்ட ஓரு பையில் மூச்சை உள்ளே விடுவோம். அவரவர் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவை ஒருவர் பார்க்க முடியும். இப்போது இவை எதுவுமே இல்லை. இதுபோன்ற ஆய்வுகளால்தான் நான் அறிவியலின் ஆய்வு நோக்கி ஈர்க்கப்பட்டேன். பல வகையான அரசியல் தலையீடுகள் மத அடிப்படைவாத அழுத்தங்கள் இப்போது இந்த மாதிரி ஆய்வுகளை நிறுத்திவிட்டது. எல்லாம்தான் இணையத்திலேயே இருக்கிறதே என்பது சரியான வாதமாகஎனக்குப் படவில்லை. இப்படியான சிறிய கல்லூரி ஆய்வுகளில் இருந்து மருத்துவ கல்லூரி மனித உடல் கூறாய்வு வரை எல்லாமே டிஜிட்டலில்தான் என்றால் உண்மையான ஆய்வுமுறை அறிவியலையே நீங்கள் கைவிடுகிறீர்கள் என்றுதானே அர்த்தம். உடலுக்கு கால்சியம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு பொது மக்கள் முன்னிலையில் நான் குறிப்பிட்ட தவளை இதயம் சம்பந்தப்பட்ட ஆய்வை செய்து காட்டுவது ஓரு வகையில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும். மதப்பிரச்சாரம் போலவே அறிவியல் ஆய்வுகளை டிஜிட்டல் மயமாக்குவதை என்னால் ஏற்க முடியவில்லை. அது பொது அறிவியலையே பலவீனப்படுத்திவிடும்.
கேள்வி: உங்கள் டி.என்.ஏ. வை நீங்களே வரன்முறையியலுக்கு உட்படுத்தி கட்டுடைத்து அறிவிப்பீர்களா?
ஜான் சல்ஸ்டன்: இல்லை ஆனால் மரபணு ஓப்புமைக்கு அது உதவலாம். தற்போது பயோ பேங்க் எனும் உயிரணு வங்கியில் 500,000 நபர்களின் டி.என்.ஏ. ஏற்கெனவே உள்ளது. என்ன நடக்கிறது என்று என்னால் விளக்க முடியும். இந்த ஜினோம்களை முறையாக கட்டுடைத்து ஓப்பிட்டு ஆய்வு செய்யும்போது பல நன்மைகள் விளையும். அதற்கு ஏராளமான டேட்டாக்களை நாம் கணினியாக்கத்திற்கு உட்படுத்தி புதிய மென் பெருட்களை அடைந்த துல்லியமாக ஆராய வேண்டும். அப்படி செய்யும்போது மூன்று விசயங்கள் நடக்கும். ஓன்று குறைந்த பட்சம் முப்பது மரண நோய்களின் காரணம் கிடைத்துவிடும். அதில் மிக முக்கியமானது புற்றுநோய். இரண்டாவது மரபணுக்களில் நோய்களை ஏற்படுத்தும் பிறழ்வு …. தனித்து அறிந்து மாற்றம் செய்யும் மருத்துவமுறை அறிமுகம் ஆகும். மூன்றாவது சற்று அதிக கற்பனையாகப்படலாம். அதாவது பிறந்த குழந்தைக்கு மரபணு மேப்பிங் சான்றிதழ் தரும் முறை. வருங்காலத்தில் அவருக்கு வரப்போகும் நோய்கள் பற்றி அவரது பொது சுகாதாரம் குறித்து முன் அறிவிக்க முடியும்.
2003ம் வருடம் நீங்களும் மற்ற 21 நோபல் அறிஞர்களும் வெளியிட்ட மனித நேய அறிக்கை அதாவது ஹ்யூமனிஸ்ட் மேனிபெஸ்ட்டோ Humanist Manifesto) பற்றி செல்லுங்கள்?
ஜான் சல்ஸ்டன்: இன்றைய உலகம் மத அடிப்படைவாதத்தின் மறுமலர்ச்சி உலகமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தேவை மத சார்பின்மை. நமது பிரிட்டனில் பிரிட்டிஷ் மனிதநேய கழகம் என்று 1967லிருந்தே இருந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். மதம் வேண்டாம் மூட நம்பிக்கை எதுவும் தேவை இல்லை என அனைவரையும் சமமாக பாவிக்கும் அறிவியல் சிந்தனை மனிதர்களுக்கான அமைப்பாக அது மலர்ந்த்து. 2017ல் நாங்கள் அதன் பெயரை மனித நேய கழகம் (Humanist AssociationUK) என்று மாற்றினோம். மனிதநேய அறிக்கை 1933ல் வெளிவந்தது. மூன்றுமே ஒரு மைய விசயத்தை உள்ளடக்கியவை. மதத்தின் பெயரால் நடக்கும் இறை நம்பிக்கைவாத வன்முறைக்கு எதிரான மனித நம்பிக்கை வாதம் புனித நூல் அடிப்படை வாதத்திற்கு மாற்றாக அறிவியல் அடிப்படை வாதம். மனித நேய அறிவியல் வாதிகள் எதிர்கால உலகை காக்கும் பேராற்றல் அறிவியலுக்கே உண்டு என ஏற்றவர்கள். இன்றையத் தேவை மதவாதமல்ல அறிவியல் விழிப்புணர்வு. நமக்கு இன்று அறிவியல் மனிதனே தேவை,.
மனித நேய அறிக்கை ஓரு நாத்திக வாத அறிக்கை என்றும் வரட்டு நாத்திகம் எப்படி பிரச்சனைகளின் தீர்வாக முடியும் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?
பொதுவாக நடுநிலைவாதி என்று தன்னை சொல்லிக் கொள்ளும் மத நம்பிக்கை நிழல்வாதிகள் இப்படி பேசுவது புதிதல்ல. மனித நேய அறிக்கை-3 ஏழு முக்கிய அம்சங்கள் கொண்டது. உலக அறிவு இயற்கையை உற்று நோக்குதல் ஆய்வுக்கு உட்படுத்துதல் மற்றும் நவீன கலக சிந்தனை மூலமே வளர்த்தெடுக்கப்பட முடியும். மனிதன் இயற்கையின் ஓரு பகுதி அதுவும் பரிணாமவியல்படி இயற்கை தெரிவின்படி உருவானவன் என்பதை மட்டுமே நாங்கள் ஏற்கிறோம். மனித நடத்தை விதிகள் என்பவை அந்தந்த காலச் சூழல் தேவைப்படி உருவானவை. மத அடிப்படைவாத நடத்தை விதிகளிடமிருந்து நாங்கள் முரண்படுகிறோம். மனித நேய அறிவியல் கொள்கை வெற்று கடவுள் மறுப்பு கொள்கை அல்ல அறிவியல் முறைப்படி உலகை துய்த்து அறிவதற்கு கடவுள் தேவையில்லை என்று கருதும் கெள்கை அது.
ஸ்டீபன் ஹாக்கிங் முதல் ரிச்சர்டு டாக்கின்ஸ், பிரான்சிஸ் கிரிக் உட்பட எத்தனையோ மாபெரும் அறிஞர்கள் அறிவியல் அறிக்கையான மனித நேய அறிக்கை Humanist Manifesto)யை ஏற்று கைச்சாற்று இட்டவர்களில் அடங்குவர்.
l