கார்த்திகைப் பாண்டியனின் உலக அளவிலான சிறுகதை முயற்சியில் இது மூன்றாவது தொகுதி. இந்தத் தொகுப்பில் பத்து கதைகள் உள்ளன இதில் ரஷ்ய கவிஞர் எழுத்தாளர் டோனிலா டேவிடோவின் தொலை நோக்கி கதையை அடவி இதழிலும் அர்ஜெண்டினாவின் பெண் எழுத்தாளர் சமந்தா ஸ்வெப்ளின் எழுதிய வாய் நிறைய பறவைகள் கதையை கல்குதிரை இதழிலும் வாசித்திருக்கிறேன்
.
கார்த்திகை பாண்டியன் தேடலை கண்டு வியக்கிறேன். அறியப்படாத நாடுகளின் நல் இலக்கிய தரவுகளைத் தேடி எடுத்து நல்ல தமிழில் தருவது என்பது ஒரு வகைதவம். இந்தத் தொகுப்பில் போஸ்னியா நாட்டின் எல்விஸ் ஹாஜிக் எழுதிய ‘பெஞ்சமின் ஸெக்கின் கதை’ என்னை வெகுவாக கவர்ந்த படைப்பு. மூன்றாம் உலகில் இன்று நடக்கும் நாசகர அதிகார சுரண்டல் மற்றும் மக்கள் மீதான ஏதோவகை தாக்குதலை இக்கதை உருவகமாகக் கொண்டு நம்மை தாக்குகிறது.
தன் பள்ளியை விரும்பாத சிறுவன் பெஞ்சமின் செர்பிய குரோஷிய மொழி இலக்கியம் விரும்பி வாசித்து செர்ரிகளை நிக்கப் போய் பொறி வண்டாகிவிட்டதாய் உணர்வான்.. ராணுவ வீரனின் தோட்டாக்கள் இந்த கதையின் முடிவிலிருந்து அதிர்ந்து கதையின் முன்னோக்கி நகரும் புதிய அனுபவம். அழகியலில் தோய்த்த அரசியல் கதைகள்.
துண்டிக்கப்பட்ட தலையின் கதை
கார்த்திகைப் பாண்டியன்
எதிர், பக். 182, விலை. ரூ. 180